அடுத்தவருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் மருந்தினை விநியோகிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரேக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.
சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே மருந்து வழங்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியா கொரோனா வைரசிற்கான மருந்துகளிற்கு அனுமதிவழங்கும் நடைமுறையை நோக்கி உரிய வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாத முடிவிற்குள் அவுஸ்திரேலியாவில் கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலவசமாக, சுயவிருப்பத்தின் அடிப்படையில் அனைவருக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய மக்கள் பெருமளவில் மருந்தினை பயன்படுத்தவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்,எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பைசர்பயோன்டெக்கின் மருந்தினை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மார்ச் மாதத்தில் ஆரம்பமாகலாம் என்ற எதிர்பார்ப்பு அவுஸ்திரேலியாவில் காணப்படுகின்றது.