அவுஸ்திரேலியாவின் விக்டோரியா- நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லையிலுள்ள Liparoo அருகே தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆற்றில் மூழ்கிப் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி பழுகாமத்தைச் சேர்ந்த சோ.திசாந்தன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு பலியானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த திசாந்தன் குயின்ஸ்லாந்து, சிட்னி போன்ற இடங்களில் வசித்த பின்னர் அண்மையில் விக்டோரியாவில் குடியேறியதாக குறிப்பிடப்படுகிறது.
நத்தார் தினத்தன்று தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்றிருந்த இவர் அங்கு நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாகவும், பாரிய தேடுதல் நடவடிக்கையின் பின்னர் நேற்று(27) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal