Home / குமரன் (page 992)

குமரன்

நல்லூரில் திலீபனை நினைவு கூர்ந்தனர்

தியாக தீபம் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ் வேளையில் தியாக வேள்வியில் திலீபன் தன்னை ஆகுதியாக்கிய பன்னிரண்டாவது நாளான இன்று திலீபன் அவர்களின் நினைவுத்தூபி விசமிகளால் தர்க்கப்பட்ட அதே இடத்தில் ஜனநாயக போராளிகளால் நினைவு கூரப்பட்டது. ஜனநாயக போராளிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஜானம் ,வடமாகாணசபை உறுப்பினர் ...

Read More »

இசைக்கு நாடு, காலம் கிடையாது – இளையராஜா

பாகிஸ்தான் நடிகர்-நடிகையர் மற்றும் இசைக் கலைஞர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துவரும் நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் இளையராஜா, ‘இசைக்கு நாடு கிடையாது’ என்று தெரிவித்துள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ள இசைஞானி இளையராஜா இந்த மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியா, டெக்சாஸ், டல்லாஸ், அட்லான்ட்டா, நியூயார்ல், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் தமிழிலும், தெலுங்கிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் ...

Read More »

பெற்றோரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துவருவதற்கான புதிய விசா

பெற்றோரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துவருவதற்கான புதிய விசா ஒன்று எதிர்வரும் ஜுலை 2017 முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5 வருடங்களுக்கான தற்காலிக பெற்றோர் விசா ஒன்றே இவ்வாறு அறிமுகப்படுத்தப்ப டவுள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தவர்களுடன் கலந்துரையாடும் செயற்பாடு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்தார். தற்போது அமுலில் உள்ள பெற்றோர் விசாக்களைப் பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டிய அதேநேரம் அதிகளவு பணமும் செலவாகின்றது ...

Read More »

பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள ‘ரொசாட்டா விண்கலம்’

67பி சுரியுமோவ் ஜெரன்சிமென்கோ என்ற வால் நட்சத்திரத்தை ஆராய்ந்து வந்த ‘ரொசாட்டா விண்கலம்’ இம்மாத இறுதியில் தன்னுடைய பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்ட விண்கலம் ரொசாட்டா. 67பி வால் நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது முதல் பல தகவல்களை பூமிக்கு அனுப்பி வந்தது. ரொசாட்டா சுமந்து சென்ற ரோபோட்டிக் வாகனமான பிளே 67பியில் தரையிரங்கியது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. ...

Read More »

3 மொழிகளில் வெளியாகும் லிங்குசாமியின் கவிதை தொகுப்பு

சூர்யா நடிப்பில் இயக்கிய அஞ்சான் படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சண்டக்கோழி-2 படத்தை லிங்குசாமி இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், பின்னர் அவருக்கும், விஷாலுக்குமிடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தனது அடுத்த படத்தை லிங்குசாமி இயக்கயிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அதனால் அந்த படத்திற்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி. இந்த நிலையில், லிங்குசாமி எழுதிய லிங்கூ-2 என்ற கவிதை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தில் பலத்த வெடிசத்தம்

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தில் பலத்த வெடிசத்தம், புகை மூட்டம் ஏற்பட்டதால் விமானிகள் அனைவரும் பதற்றப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று கியூன்ஸ்லெண்ட் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை பயணிகளுடன் புறப்பட்டுச்சென்றது. அப்போது விமானத்தின் இன்ஜின் பிரச்சனை காரணமாக விமான ஓட்டுநர் உடனடியாக பிரிஸ்பேனுக்கு விமானத்தை செலுத்தியுள்ளார். பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்குள் பயணிகளின் சீட்டிற்கு அடியில் பயங்கர வெடிசத்தத்துடன் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் அனைவரும் ...

Read More »

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுகதமிழ் பிரகடனம்- 2016

2016ஆம் ஆண்டு, செப்ரெம்பர் 24ஆம் நாள், யாழ்ப்பாண முற்றவெளியில் நடைபெறுகின்ற ‘எழுக தமிழ் 2016!’ எழுச்சிப் பேரணி கீழ்வரும்; பிரகடனம்  செய்யப்பட்டது. 1.    வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை வலிந்து பௌத்த சிங்கள மயமாக்கும் நோக்குடன் சிங்களக் குடியேற்றங்களும், பௌத்த  விகாரைகளும், புத்தர் சிலைகளும் இவ்வாட்சியிலும் அரசின் அனுசரணையுடனும், ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உதவியுடனும்; உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களுடைய  இன அடையாளத்தை அழிக்கவும்;, வட கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களின் ...

Read More »

‘எழுக தமிழ்’ மக்கள் பேரணியின் பிரகடனம் வெளியிடப்பட்டது

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணி இன்று (சனிக்கிழாமை) காலை 10.00 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முன்பாக இருந்தும் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.முற்றவெளியை சென்றடைந்து  மாபெரும் பொதுக் கூட்டம் இடம்பெற்றது. இந்த  பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உரிமை கோசங்களை எழுப்பினர்கள். முற்றவெளியில் நடைபெற்ற  பொதுக் கூட்டத்தில் எழுக தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டது. அத்துடன் வடமாகாண முதலமைச்சர்  தமிழ் ...

Read More »

ஒஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் ஒரு பார்வை

உலகளவில் சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஒஸ்கர். ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்களே அதிகளவில் ஆஸ்கர் விருதுகளை தட்டி செல்கிறது. இந்தியா சார்பிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கு படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு இந்தியா சார்பில் தமிழில் வெளியான வெற்றிமாறன் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ் படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது பெரிய கவுரவம் என்றாலும், இந்த கவுரம் கிடைத்தது இது முதல்முறையல்ல, ஏற்கனவே 8 ...

Read More »

மனநிலையை கண்டறியும் EQ ரேடியோ கண்டுபிடிப்பு

உங்கள் மனநிலை எப்படி உள்ளது? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்பதைக் கண்டறியும் புதிய கருவியை எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொழில்நுட்பம் எவ்வளவு தான் வளர்ந்து விட்ட போதிலும் ஒருவர் மனநிலை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய எவ்வளவு பெரிய திறமைசாலியாலும் முடியாது. ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தால் அதனை ஓரளவு நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதுவே துக்கமாக அல்லது சோகமாக இருந்தால் அதனை நம்மால் எளிதில் உணர முடியாது. இந்நிலையில் ஒருவரின் ...

Read More »