நேற்று (16) வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கு தெளிவுபடுத்த முற்றட்ட தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக தெளிவுபடுத்த முற்பட்டபோதே கடுமையான வாக்குவாதம் மக்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் இடம்பெற்றது.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “முடியும் என்றால் பதிலளிப்போம் அதில் நாம் என்ன சொல்லப்போகின்றோம் என நீங்கள் சொல்லமுடியாது என்றும் சொல்லக்கூடிய கேள்விக்கு பதில்சொல்வோம் என்றும் கூறினார். மக்கள் கேள்விகளை கேட்டபோது அதனை தடுப்பதற்காகவும் தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
அதில் கலந்துகொண்ட சுமந்திரன் சர்வதேச விசாரணையை பலர் கோருகின்றார்கள் அந்த சர்வதேச விசாரணை அதுவும் உலக தரத்தில் இதுமிகவும் சிறந்த விசாரணை முடிவடைந்து விட்டதாகவும் நாங்கள் இதுவரை என்ன தவறு செய்தோம் எனவும் கேட்டுக்கொண்டார்.
30வருடம் போராடி என்ன நீங்கள் செய்தீர்கள் நீலன் திருச்சசெல்வம் அமிர்தலிங்கத்தை துரோகியென சுட்டுக்கொன்றீர்கள் அதைப்போல என்னையும் துரோகியென சொல்லி சுட்டுகொன்றுவிட்டு சென்ன செய்யப்போகின்றீர்கள் ஒரு 2மாதம்தானே பொறுத்திருங்கள் முடியாவிட்டால் நாம் சொல்லுவோம் அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்றும் மிக ஆவேசமாக பதிலளித்திருந்தார்.
நாங்கள் ஆரவாரத்திற்கு இல்லாமல் சர்வதேச அங்கிகாரத்திற்கான ஒரு தேவை ஏற்பட்டால் வெளிநடப்பு செய்வோம்.
அப்படி எங்களுடைய மக்களின் அபிலாஷைகளை அடையக்கூடியதாக ஒரு அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு ஒரு சதம் ஏனும் வாய்ப்பு இருக்கும் வரைக்கும் நாங்கள் இருப்போம்” என அவர் தெரிவித்திருந்தார்.