குமரன்

தென் சீனக் கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கை -ஆராயும் அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியா, இந்தோனேசியாவுடன் இணைந்து, சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்துவருகிறது. கடந்த வாரம் இந்தோனேசிய அதிகாரிகளுடனான சந்திப்புகளில் அது குறித்து பேசப்பட்டதாக அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஜுலி பிஷப் கூறினார். கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகள் பற்றி ஆராயவிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தென் சீனக் கடலிலும், சூலு (Sulu) கடலிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நடத்துவது அவற்றுள் அடங்கும். அவுஸ்ரேலியாவுடன், அமைதிச் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்வது குறித்து தாம் பரிந்துரைத்திருப்பதாய் இந்தோனேசியத் தற்காப்பு அமைச்சர் கூறியதாக சிட்னி மார்னிங் ...

Read More »

அவுஸ்ரேலியா -தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது

அவுஸ்ரேலியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நாளை தொடங்குகிறது. அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. காயத்தால் டிவில்லியர்ஸ் ஓய்வு எடுப்பதால் தென்ஆப்பிரிக்க அணியை பாப் டு பிளிஸ்சிஸ் வழிநடத்துகிறார். தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளம் என்று வர்ணிக்கப்படும் பெர்த்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களே! வீரர்களின் விபரங்களை பதிவு செய்க!

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் அவுஸ்ரேலிய நாட்டிலும், 2016ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்ரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விபரப்பட்டியலில் இல்லாத, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அண்மையில் குடிபுகுந்தவர்கள் தயவு ...

Read More »

செய்திகளைத் தெரிந்துகொள்ள புதிய வழி !

கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் செய்திகளைத் தெரிந்துகொள்ளக் கஷ்டப்பட வேண்டாம். செய்தித் திரட்டிகள் முதல் செய்திகளைச் சுருக்கமாக வழங்கும் செயலிகள் வரை பல விதமான செய்திச் செயலிகள் இருக்கின்றன. இந்த வரிசையில் மைக்ரோசாஃப்ட்டின் ‘நியூஸ் புரோ’ செயலியும் இணைந்துள்ளது. சோதனை முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டுவரும் ‘மைக்ரோசாஃப்ட் கேரெஜ்’ திட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் செய்திச் செயலி வழக்கமான செய்திச் செயலிகளிலிருந்து மாறுபட்டது. எப்படி எனில், இந்தச் செயலி பயனாளிகளிக்கு அவர்கள் பணியாற்றும் துறை தொடர்பான செய்திகளை முன்னிறுத்துகிறது. ஆக, ஒரு ...

Read More »

பழங்குடி இனத்தவர் கதாபாத்திரத்தில் மீண்டும் ஜெயம் ரவி

விஜய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மீண்டும் பழங்குடி இனத்தவர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி. பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி’ படத்தைத் தொடர்ந்து தனது படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் விஜய். ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் இப்படத்தை இப்படத்தை தனது ‘தி திங்க் பிக் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் மூலமாக தயாரிக்கவும் இருக்கிறார். நாயகியாக சாயிஷா சைகல், ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ், சண்டை பயிற்சியாளராக சில்வா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் நாயகி சாயிஷா சைகல், ...

Read More »

அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதித்திட்டத்தின்கீழ் தாயகத்தில் நிமிர்ந்த யாழ். இளைஞன்

அவுஸ்ரேலியாவுக்கு சென்று அகதி அந்தஸ்துக்கோரிய நிலையில், அதில் தோல்வியை கண்ட யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் இன்று சொந்த தொழிலில் சிறப்பாக வாழ்ந்துவருவதாக தெ ஒஸ்ரேலியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து படகு ஒன்றின்மூலம் அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச்சென்ற மார்க்கஸ் பிரீசன் என்பவருக்கு இந்த வாழ்க்கை வாய்த்திருப்பதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இவருக்கு அங்கு அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை. முயற்சியில் தோல்விக்கண்டார். இதனையடுத்து நாடு திரும்ப இணங்கினார். தமது சொந்த விருப்பத்தின்பேரில் நாடு திரும்பிய இவருக்கு அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதித்திட்டத்தின்கீழ் சர்வதேச புலம்பெயர்ந்தோர் ...

Read More »

வேகநடைப் போட்டியில் தங்கம்- 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி அசத்தல்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 90 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கான 5000 மீட்டர் வேகநடைப் போட்டியும் ஒன்று. இதில், இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஸ்ரீராமுலு (விசாகப்பட்டினம்) கலந்துகொண்டு தங்கம் வென்றார். மேலும், இந்த வாரம் நடைபெற உள்ள 10 கி.மீ. மற்றும் 20 கி.மீ. வேகநடைப் பந்தயங்களிலும் ...

Read More »

தற்கொலை செய்ய நினைத்தேன்- அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்

ஓய்வு மற்றும் திருமண முறிவு போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியதாக அவுஸ்ரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். 2003 மற்றும் 2007ல் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இவர் முக்கிய பங்குவகித்தார். 2007-08ல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற இவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக தொகுத்து சுயசரிதை புத்தகத்தை நேற்று (31) வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கஞ்சா வளர்க்க அனுமதி

கஞ்சாச் செடியை வளர்ப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம், பொறுப்பான அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. கஞ்சா இறக்குமதிக்குப் பதிலாக அதை உள்ளூரிலே தயாரிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம்  அந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. போதைப் பொருள் சட்டத்தின் அண்மைய திருத்தம் கடந்த மாதம் செய்யப்பட்டது. அறிவியல், மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாச் செடியை வளர்ப்பதற்குச் சட்டம் அனுமதிக்கிறது.   கஞ்சாவை மருந்தாக உட்கொள்கிறவர்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதில் சவால்களை எதிர்நோக்குவதாக அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. சட்டத்தில் ஏற்பட்டுள்ள திருத்தத்தால் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடு மேலும் சுலபமாகுதம் என்று அமைச்சு சொன்னது.

Read More »

சரவாக் பூங்காவில் காணாமல் போன அவுஸ்ரேலியர்

சரவாக்கிலுள்ள பிரபல மூலூ தேசியப் பூங்காவில் காணாமல்போனஅவுஸ்ரேலிய சுற்றுப்பயணிக்கான தேடல் தொடர்ந்து நடைபெறுகிறது. 28 வயது ஆண்ட்ரூ காஸ்கெட் நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனார். அந்தப் பூங்காவிற்குள் அவர் தனியாகச் சென்றிருந்ததாகத் தெரியவந்தது. பூங்காவிற்குள் அவர் கடந்து சென்ற பாதையைப் பற்றிய விவரம் தெரியவில்லை. குகைகள், பூமிக்கு அடியிலுள்ள ஆறுகள், மலைப்பகுதிகள், கூர்மையான சுண்ணாம்புக் கற்கள் ஆகியவை அந்த பூங்காவில் உள்ளன. நேற்று தேடல், மீட்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 40 பேர், மூலூ மலைச்சிகரம், புக்கிட் சுசு, ரேசர்ஸ் குகை ஆகிய ...

Read More »