அவுஸ்ரேலியாவுக்கு சென்று அகதி அந்தஸ்துக்கோரிய நிலையில், அதில் தோல்வியை கண்ட யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் இன்று சொந்த தொழிலில் சிறப்பாக வாழ்ந்துவருவதாக தெ ஒஸ்ரேலியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து படகு ஒன்றின்மூலம் அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச்சென்ற மார்க்கஸ் பிரீசன் என்பவருக்கு இந்த வாழ்க்கை வாய்த்திருப்பதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இவருக்கு அங்கு அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை. முயற்சியில் தோல்விக்கண்டார். இதனையடுத்து நாடு திரும்ப இணங்கினார்.
தமது சொந்த விருப்பத்தின்பேரில் நாடு திரும்பிய இவருக்கு அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதித்திட்டத்தின்கீழ் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு, 5000 டொலர்களை வழங்கியது
இதனைக்கொண்டு பிரீசன் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் புதிய படகுகளை கொள்வனவு செய்து சந்தோசமாக வாழ்வதாக ஒஸ்ரேலியன் குறிப்பிட்டுள்ளது.
எனவே அகதி அந்தஸ்துக்கோரிக்கையில் தோல்விக்கண்ட பிரீசன், வாழ்க்கையில் வெற்றிப்பெற்றுள்ளதாக ஒஸ்ரேலியன் தெரிவித்துள்ளது.
இதேபோன்ற உதவி மற்றும் ஒரு யாழ்ப்பாண மீனவருக்கும் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள தெ ஒஸ்ரேலியன், நாடு திரும்பிய மற்றும் ஒருவர் தாம் பொருளாதாரம் கருதியே அவுஸ்ரேலியாவுக்கு சென்றதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.