குமரன்

ஊக்கம் தரும் உரைகளுக்கு

கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் இணையம் ஒரு வகுப்பறை யாக இருக்கும். உங்கள் ஆர்வம் அல்லது தேடல் தொடர்பான எந்தத் தலைப்பிலான வீடியோ பாடங்களையும் இணையத்தில் கண்டுபிடித்துவிடலாம். இப்போது இந்தத் தேடலில் கைகொடுக்க வந்துள்ளது ‘ஃபைண்ட்லெக்சர்ஸ்’ எனும் இனையதளம். கோர்சரா, கான் அகாடமி போன்ற இணையத் திட்டங்கள் இத்தகைய பாடங்களை வழங்கி வருகின்றன என்றால், உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான எம்.ஐ.டி, ஆக்ஸ்ஃபோர்ட் உள்ளிட்டவற்றின் பாடங்கள் மற்றும் பேராசிரியர்களின் உரைகளும் இணையம் மூலம் எளிதில் அணுகக்கூடியதாக இருக்கின்றன. யூடியூப்பிலும் கல்வி தொடர்பான வீடியோ சேனல்கள் ...

Read More »

ரஜினிகாந்துடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்-அமீர்கான்

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.இந்தி நடிகர் அமீர்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “எனது படங்கள் வசூல் குவிப்பதாகவும், நல்ல கதைகள் எனக்கு அமைவதாகவும் பலரும் பேசுகிறார்கள். நான் கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன். டைரக்டர்கள் கதை சொல்லும்போது ஒரு ரசிகன் மாதிரி கேட்பேன். எனக்குள் இருக்கும் அந்த ரசிகனை கதை திருப்தி செய்தால் உடனே நடிக்க ஒப்புக்கொள்வேன். அதுமட்டுமன்றி டைரக்டர்களும் என்னை மனதில் வைத்து கதை எழுதுகிறார்கள். அதனால்தான் நல்ல படங்கள் அமைகின்றன. ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வீடுகளை கொள்வனவு செய்த அமைச்சின் செயலாளர்

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை நிர்மாணித்த சீன நிறுவனத்திடம் இருந்து கிடைத்த தரகு பணம் மூலம் மின்வலு எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் 4 வீடுகளை கொள்வனவு செய்துள்ளதாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் கொழும்பு கிருளப்பனையிலும் அவர் ஒரு வீட்டை கொள்வனவு செய்துள்ளார் எனவும் நாமல் ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார். மருதானையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்துள்ள இப்படியான கொடுக்கல் வாங்கல்களுக்கு அமைச்சரவையின் அனுமதிக் கிடைத்துள்ளதால், விசாரணைகளை முன்னோக்கி ...

Read More »

பொருத்து வீடு வேண்டாம்! கிளிநொச்சி மக்கள் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் பொதுமக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ‘வேண்டாம் வேண்டாம் பொருத்து வீடு வேண்டாம்’, ‘விளையாடாதே விளையாடாதே வீட்டுத்திட்டத்தில் விளையாடாதே’, ‘குசினியில்லா வீடெதற்கு’, போன்ற பதாகைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

அவுஸ்ரேலிய அணி 39 ஓட்டங்களால் வெற்றி !

அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 39 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 429 ஓட்டங்களை பெற்றுதுடன், பாகிஸ்தான் அணி 142 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 202 ஓட்டங்களுக்குள் ஆட்டத்தை இடைநிறுத்தி, பாகிஸ்தான் அணிக்கு 490 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 450 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. பாகிஸ்தான் ...

Read More »

அவுஸ்ரேலியா குடியரசாக மாற வேண்டும்!

இரண்டாம் எலிசபத் அரசியாரின் மறைவுக்குப் பிறகு அவுஸ்ரேலியா குடியரசாக மாறவேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனைச் சேர்ந்த அரசகுடும்பத்தினருக்குப் பதிலாக அவுஸ்ரேலிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அதிபர் நாட்டின் தலைவராக இருக்கவேண்டும் என்று திரு டர்ன்புல் கூறினார். நாட்டுப்பற்றால் அத்தகைய கருத்தைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார். அவுஸ்ரேலியாவில் எலிசபத் அரசியாரின் ஆட்சி, இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அவுஸ்ரேலியா மக்களில் பெரும்பாலோருக்கிடையில் அரசியார் பிரபலமாக இருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. டர்ன்புல்லின் கருத்திற்கு, அவரது கட்சியிலே இருக்கும் ...

Read More »

ஃபேஸ்புக் தளத்தில் க்ரூப் காலிங் வசதி அறிமுகம்

ஃபேஸ்புக்கில் க்ரூப் காலிங் வசதி வழங்கப்பட்டள்ளது. இதே போன்ற அம்சம் மற்ற சமூக வலைத்தளங்களிலும் சில காலமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்று பயன்பாட்டில் இருந்து வரும், மற்ற தளங்கள் வழங்கும் அம்சங்களை அப்படியே வழங்குவதாக ஃபேஸ்புக் மீது சொல்லப்படாத குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் க்ரூப் காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதே அம்சம் சில காலமாக ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் உள்ளிட்ட தளங்களும் வழங்கி வருகின்றன. ஃபேஸ்புக் வாசிகள் நேரடியாக க்ரூப் சாட் ஆப்ஷன் சென்றால் அங்கு காலிங் ...

Read More »

‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகியாக மாணவி தேர்வு

‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகியாக புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. அதில் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர். அதில் புவேர்ட்டோ ரிக்கோ ...

Read More »

பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் ஆனார்

பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளராக உருவாகியிருக்கிறார். தனது தனித்துவமான குரல் வளத்தை கொண்டு இசை பிரியர்களின் உள்ளங்களை தன் பாடல்களால் வென்று இருப்பவர் அனுராதா ஸ்ரீராம். ‘இனி அச்சம் அச்சம் இல்லை’… ‘அன்பென்ற மழையிலே’… ‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என பல பாடல்களுக்கு அனுராதா ஸ்ரீராமின் குரல் உயிர் மூச்சாக இருந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் தற்போது இசையமைப்பாளராக மாறியிருக்கிறார். ‘மனசு’, ‘விருப்பம்’ என இரண்டு பாடல்களையும் எழுதி, அவரே இசையமைத்து, அதை மதன் கார்க்கியின் ‘டூப்பாடூ’ ...

Read More »

சிறீலங்கா கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி!

சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுக்கு உயர்மட்டப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் பெப்ரவரி மாதத்துடன், சிறிலங்கா கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்த்தன சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். இதன் பின்னர், அவர் உயர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போதைய கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். அண்மையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் ...

Read More »