குமரன்

ரவிராஜ் படுகொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா நேரப்படி இன்று (24) சனிக்கிழமை அதிகாலை விடுதலை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக மற்றும் ஏழு பேர் கொண்ட சிங்கள ஜூரிகள் சபை முன்பாக நடந்த நீண்ட தொகுப்புரைகளை அடுத்து, இன்று சனிக்கிழமை அதிகாலையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மன்றில் நிறுத்தப்படாத முதலாவது, இரண்டாவது ...

Read More »

பார்வை பறிபோனவர்களும் இனி பார்க்க முடியும்!

பார்வை பறிபோனவர்களாக இருட்டு வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கும் பலருக்கு பார்வையளிக்கும் புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு, கைமேல் பலனளிக்க தொடங்கியுள்ளது. செகண்ட் சைட் எனும் நிறுவனம் ‘பயோனிக் ஐ’ என்ற பெயரில் சாதனை கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயோனிக் ஐ சாதனத்தின் மூலம் பார்வை பறிபோனவர்களுக்கு மீண்டும் பார்வையைளிக்க முடியும் என்பதை பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். லண்டன் அரசாங்கத்தின் தேசிய சுகாதார சேவையின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பார்வை பறிபோன பத்து பேருக்கு கண் பார்வையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ...

Read More »

பிரபலங்கள் பட்டியலில் சல்மான்கான் முதலிடம்

போர்ப்ஸ் வணிக பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் இந்தி நடிகர் சல்மான்கான் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் மெகா ஸ்டார் ஷாருக்கான் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2015 அக்டோபர் முதல் 2016 செப்டம்பர் வரையிலான காலத்தில் கிடைத்த வருமானம் மற்றும் புகழ் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 100 இந்திய பிரபலங்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், வருவாய் அடிப்படையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இவரது வருவாய் ரூ.270 கோடியாக இருக்கிறது. இதனையடுத்து முதலிடத்தில் இருந்த ...

Read More »

கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தப்பட்டது

உலகில் முதன் முறையாக பிறவியிலேயே கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தி போலந்து வைத்தியர்கள் சாதனை படைத்தனர். போலந்து நாட்டைச் சேர்ந்த 32 வயது வாலிபர் பிறவியிலேயே மணிக்கட்டுக்கு கீழ் விரல்கள் அதாவது கை இல்லாமல் பிறந்தார் இதனால் மிகவும் கஷ்டப்பட்டு வந்த அவர் விரோல்கலா மருத்துவ பல் கலைக்கழக ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்  ஆடம் டொமேன்ஸ் விகாவிடம் சென்று சிகிச்சை ஆலோசனை பெற்றார். அப்போது மரணம் அடைந்த ஒருவரின் கையை தானமாக பெற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ...

Read More »

விரைவில் மாவையின் சுயசரிதை!

இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தனது வாழ்க்கைப்பயணத்தை ஆவணமாக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பில் சக அரசியல் கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் தன்னை வலியுறுத்திவருவதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். அண்மையில் இருளுள் இதய பூமி எனும் மணலாறு நில சுவீகரிப்பு தொடர்பான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளிடுகையில் மணலாறின் ஒவ்வொரு அங்குலத்திலும் தனது காலடி பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தனது சிறைவாழ்வு உள்ளிட்ட அரசியல் பயணத்தை ஆவணப்படுத்த சுயசரிதை நூலொன்றை எழுதவுள்ளதாக தெரிவித்தார். இதே வேளை தமிழ் மக்கள் ...

Read More »

சிட்னி தண்டரை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ்

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் அவுஸ்ரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 2016-17-க்கான தொடர் நேற்று முன்தினம் (20-ந்தேதி) தொடங்கியது. 22 ஆம் திகதி நடைபெற்ற 3-வது போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் – சிட்னி தண்டர் அணிகள் மெல்போர்ன் மைதனாத்தில் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் ...

Read More »

ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்

அய்யப்பனுக்கு இரவில் பாடப்படும் ஹரிவராசனம் பாடலில் தவறு இருப்பதால், அந்த தவறை திருத்தி மீண்டும் யேசுதாஸ் பாடினால் சபரிமலையில் ஒலிபரப்ப தயாராக உள்ளதாக தந்திரி கூறி உள்ளார்.கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். சன்னிதானத்தில் 18-ம் படி ஏற மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அப்போது அய்யப்பனை தூங்க வைக்க ஹரிவராசனம் ...

Read More »

மெல்போர்ன் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் கைது

அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒரு பெண் உள்பட 7 தீவிரவாதிகளை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தனது நாட்டு வீரர்களை ஈடுபடுத்திவரும் அவுஸ்ரேலியாவை தாக்க ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பிரகடனம் செய்துள்ளன. இதையடுத்து, அமைதியான நாடாக அறியப்பட்ட அவுஸ்ரேலியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பல்வேறு தாக்குதல்கள் தொடர்பான திட்டங்களையும், முயற்சிகளையும் அந்நாட்டு உளவுத்துறையினர் முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளனர். தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கிருஸ்தவ கட்டத்தில் எரிவாயு சிற்றூர்த்தி மோதியது

அவுஸ்ரேலியாவின் தலைநர் கன்பராவில் கிருஸ்தவ லொபி கட்டிடத்தில் எரிவாயு கொள்கலன்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்த்தி ஒன்று கட்டிடத்தில் மோதியத்தில் கட்டிடத் சேதமடைந்தவுடன் சிற்றூர்தி முற்றாக எரிந்துள்ளது. இச்சம்பவம் நேற்று(21)  புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சிற்றூர்த்தி ஓட்டுநர் பலத்த எரிகாயங்களுடன் கன்பரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  முதலில் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என சந்தேகித்த காவல்துறையினர் பின் ஓட்டுநரிடம் விசாரணைகளை நடத்திய பின் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More »

அவுஸ்ரேலியா அணியில் கார்ட்ரைட் சேர்ப்பு!

மெல்பார்ன்  – பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பார்னில் நடைபெற இருக்கும் பாக்சிங் டே டெஸ்டிற்காக அவுஸ்ரேலியா அணியில் ஆல் ரவுண்டர் கார்ட்ரைட் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்டில் ஆஸி. வெற்றி பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடும்போராட்டத்திற்குப்பின் அவுஸ்ரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்ட்ரைட் சேர்ப்பு 2-வது படம் டிசம்பர் 26-ந்திகதி மெல்போர்னில் நடைபெறுகிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணியில் கார்ட்ரைட் இம்பிடித்துள்ளார். ...

Read More »