குமரன்

சுன்னாகம் காவல்துறையினர் 5 பேருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு வழக்கு

சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் இளைஞர் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த ஐந்து காவல்துறையினருக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தி கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறு சட்டமாஅதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக பிரதான காவல்துறை பரிசோதகர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார். கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி 5 இளைஞர்கள் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் வைத்து அடித்து, மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தபோது அதில் சிறிஸ்கந்தராசா சுமணன் ...

Read More »

நியூயார்க்கில் வட்டமிட்ட பறக்கும் தட்டு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வட்டமிட்ட பறக்கும் தட்டை ஆலிவுட் நடிகை படம் பிடித்துள்ளார். ஆலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட். இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். அங்கு அழகான சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்தார். அப்போது அவரது காமிராவில் தற்செயலாக பறக்கும் தட்டு படம் சிக்கியது. இதனால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த படத்தின் பறக்கும் தட்டு ஒன்று நியூயார்க் நகரில் வட்டமிடுவது போன்று உள்ளது. இந்த போட்டோவை பார்த்த 90 சதவீதம் பேர் இது ...

Read More »

“நல்ல விஷயங்களை எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்”

நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- “என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. சொந்த வாழ்க்கையும் விவாதத்துக்கு உள்ளாகிறது. இது வருத்தப்பட வைக்கும் விஷயங்கள். நாட்டில் நல்லவைகள் இருக்கின்றன. அதைப்பற்றி அதிகமாக பேசுவதுதான் வரவேற்க கூடியதாக இருக்கும். ‘பிரம்மோற்சவம்’ (தெலுங்கு) படத்தில் சத்யராஜ், “நல்ல விஷயங்களை எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று ஒரு வசனம் பேசுவார். அந்த வசனம், படத்தில் அடிக்கடி வரும். எனக்கு அந்த வசனம் மிகவும் பிடிக்கும். சிலர் மற்றவர்களை பற்றி எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ...

Read More »

உலகின் முதல் தானியங்கி டாக்சி சேவை சிங்கப்பூரில் அறிமுகம்

சிங்கப்பூரைச் சேர்ந்த நுடோநோமி நிறுவனம் அந்நாட்டில் தானியங்கி டாக்சி சேவையை  நேற்று (25) அறிமுகம் செய்தது. தங்கள் நிறுவனத்தின் செயலியை கைபேசியில் தரவிறக்கம் செய்து, சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் வரையிலான இந்த டாக்சி சேவையின் வெள்ளோட்டத்தில் பொதுமக்களும் இலவசமாக பங்கேற்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இன்றைய சோதனை வெள்ளோட்டத்தில் சிலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தானியங்கி டாக்சியில் இலவசமாக பயணம் செய்த அனுபவம்  மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

Read More »

தமிழில் எனக்கான இடம் கிடைக்கும்! – பிரணிதா

அருள்நிதி நடித்த உதயன் படத்தில் தமிழுக்கு வந்தவர் பிரணிதா. அதன்பிறகு கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்தபோது அடுத்து தமிழில் முன்னணி நடிகை யாகி விடுவார் என்று கோடம்பாக்கமே எதிர்பார்த்தது. ஆனால் சகுனி தோல்வியடைந்ததால் பின்னர் பிரணிதாவை யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால் பெருத்த ஏமாற்றத்துடன் மீண்டும் கன்னட சினிமாவுக்கு சென்று நடித்து வந்த அவருக்கு சூர்யாவுடன் நடித்த மாசு என்கிற மாசிலாமணி படமும் கைகொடுக்க வில்லை. இருப்பினும், தமிழில் ஒரு இடத்தை பிடித்தே தீருவேன் என்று தொடர் முயற்சி காரணமாக தற்போது ஜெய் நடிக்கும் எனக்கு ...

Read More »

மைத்திரி அவுஸ்திரேலிய நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெறவில்லையாம்

சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த சமயத்தில் அவுஸ்திரேலிய நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்று வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென சிறீலங்காவின் அதிபர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மகாவலித் திட்ட அமைச்சராக இருந்தபோது அத்திட்டத்தை அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கையூட்டுக் கோரியதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்தநிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ பங்களிப்போ தனக்கு இல்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, அவரது ஊடகப் ...

Read More »

அவுஸ்திரேலியா அணியின் கப்டன் ஸ்மித்திற்கு ஓய்வு

சிறீலங்கா  அணிக்கெதிராக மீதமுள்ள போட்டிகளில் இருந்து அவுஸ்திரேலியா அணியின் கப்டன் ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணி சிறீலங்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு ஸ்டீவன் ஸ்மித் கப்டனாக உள்ளார். இவர் தலைமையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா 0-3 என தோற்று ஒயிட்வாஷ் ஆனது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, நேற்றைய 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ...

Read More »

இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்களை வெளியிட்டது அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம்

அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று தனது இணையதளத்தில் இந்தியாவின் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியங்களை வெளியிட்டுள்ளது.  இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் கப்பல் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கப்பட்டுள்ளது.  இந்தக் கப்பல் விரைவில் இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.  பொருட்செலவில் வாங்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் குறித்த ரகசியத்தை அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More »

செவ்வாய்க்கு விமானம்

2030-ம் ஆண்டுக்குள் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தானியங்கி விமானத்தை வடிவமைத்து அதன் சோதனை முயற்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Read More »

உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில்தீபிகா படுகோனேவுக்கு 10-வது இடம்

அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய நடிகை தீபிகாபடுகோனே 10-வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய நடிகை 10 இடத்துக்குள் வந்துள்ளார். பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே ஆண்டுக்கு 67.70 கோடி சம்பளம் பெற்று 10-வது இடத்தில் உள்ளார். அவர் நட்சத்திர நடிகையாக உருவாகி வருகிறார் என்றும் அந்த பத்திரிகை பாராட்டி உள்ளது.  சமீபத்தில் தீபிகா நடித்த இந்தி ...

Read More »