சிங்கப்பூரைச் சேர்ந்த நுடோநோமி நிறுவனம் அந்நாட்டில் தானியங்கி டாக்சி சேவையை நேற்று (25) அறிமுகம் செய்தது.
தங்கள் நிறுவனத்தின் செயலியை கைபேசியில் தரவிறக்கம் செய்து, சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் வரையிலான இந்த டாக்சி சேவையின் வெள்ளோட்டத்தில் பொதுமக்களும் இலவசமாக பங்கேற்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இன்றைய சோதனை வெள்ளோட்டத்தில் சிலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தானியங்கி டாக்சியில் இலவசமாக பயணம் செய்த அனுபவம் மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
Eelamurasu Australia Online News Portal