குமரன்

கால இழுத்தடிப்பு வேண்டாம் – யாழ்.ஆயர்!

உண்மையை மூடி மறைக்கும் நோக்கிலோ அல்லது அரசியல் லாபம் கருதியோ காலத்தை இன்னும் இழுத்தடிக்காமல் விரைவாக செயற்படுங்கள் என இலங்கை அரசிடம் யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். தழிழ் புத்தாண்டு ஈஸ்ரர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியினில் மேலும் தெரிவிக்கையினில் 2017ஆம் ஆண்டிற்குரிய தமிழ்  சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அன்பர்கள் அனைவர்க்கும்; இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை முதலில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். மூன்று தசாப்த கால போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்து ...

Read More »

இந்தியாவுடன் வர்த்தக உறவு இப்போதைக்கு சாத்தியமில்லை-அவுஸ்ரேலிய பிரதமர்

இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள தற்போது வாய்ப்புகள் குறைவு என்று அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் இந்த வார தொடக்கத்தில் இந்தியா வந்திருந்தார். இரு நாடுகளுன் வர்த்தக ரீதியான மேம்பாடுகளை ஏற்படுத்துவது தொடர்பாக தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அவர் அவுஸ்ரேலிய செய்தி ஒளிபரப்பு கழகத்திற்கு அளித்த பேட்டியில்,‘‘ தற்போதைய சூழ்நிலையில் வர்த்த ரீதியிலான ஒப்பந்தம் ஏற்பட சாத்தியமானதாக இல்லை’’ ...

Read More »

நவுறு – மானஸ் தீவுகளில் வசிக்கும் ஈழ அகதிகளது நிலை குறித்து கவலை

அவுஸ்திரேலியாவின் நிர்வாகத்தில் உள்ள நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் வசிக்கும் ஈழ அகதிகளது நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று அவர்கள் தொடர்பிலான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி குறித்த முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்த நல்லெண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டுடன் குறித்த முகாம்களை பராமறிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவுக்கு வருகிறது.இன்னும் புதிய நிறுவனத்துக்கான கேள்வி அறிவிப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அகதிகள் பெரும் சவாலை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சண்டை வடிவமைப்புக்கான தேசிய விருது அறிமுகம்

64வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த சண்டை வடிவமைப்புக்கான தேசிய விருதை அறிமுகம் செய்துள்ளார்கள். 64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில்07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த சண்டை வடிவமைப்பு என்ற விருதை இம்முறை தேசிய விருதுகள் பட்டியலில் சேர்த்துள்ளார்கள். சிறந்த சண்டைக் கலைஞருக்கான முதல் தேசிய விருதை ‘புலிமுருகன்’ படத்தின் சண்டைக்காட்சியமைப்புகாக பீட்டர் ஹெய்ன் பெற்றுள்ளார். வைசாக் இயக்கத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புலிமுருகன்’. வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் ...

Read More »

ரோபோவுக்கு ஆக்டோபஸ் கரம்!

ஜெர்மனியில் தொழிற்சாலைகளுக்கான ரோபோக்களை தயாரிக்கும், ‘பெஸ்டோ’ நிறுவனம், கடலில் வாழும் ஆக்டோபஸ் தந்த உந்துதலில் ஒரு ரோபோ கரத்தை தயாரித்துள்ளது. தொழிற்சாலைகளில் பொருட்களை எடுத்து வைக்க, ஆக்டோபஸ் கை போலவே வடிவமைக்கப்பட்ட, ‘ஆக்டோபஸ் க்ரிப்பர்’ என்ற அமைப்பு உதவும். பொருட்களை மென்மையாக, அதே சமயம் நழுவ விடாமலும் ஆக்டோபஸ் க்ரிப்பர் பிடித்து எடுத்து வைக்கிறது!

Read More »

மக்கள் விடுதலை முன்னணியின் கருத்துடன் நாமும் உடன்படுகிறோம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவில் நடத்த வேண்டும் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் கருத்துடன் தாமும் உடன்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் குறித்த கலந்துரையாடலொன்று கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) இரவு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், இதன்போது புதிய அரசமைப்பே உருவாக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தாமும் அதே நிலைப்பாட்டிலேயே காணப்படுவதாக ...

Read More »

புதிய மேகங்கள்!

மேகங்கள் பல ரகம். ‘குமுலஸ்’ முதல், ‘சிர்ரஸ்’ வரை எல்லா ரக மேகங்களுக்கும் பெயரிட்டு, அவற்றை 10 பெரிய வகைப்பாட்டுகளில் உள்ளடக்கியது, ‘சர்வதேச மேக வரைபடம்.’ 121 ஆண்டுகளாக வெளிவரும் இந்த வரைபடத்தில், கடந்த, 30 ஆண்டுகளாக எந்த புது ரகமும் சேர்க்கப்படாமலிருந்தது. ஆனால், ஸ்மார்ட்போன், இணையம் போன்ற வசதிகள் வந்ததும், பொழுதுபோக்குக்காக மேகங்களை கவனிக்கும் தன்னார்வலர்கள், புதுவகை மேகங்களை படம்பிடித்து, அவற்றை வரைபடத்தில் சேர்க்க வேண்டும் என போராடினர். அண்மையில், 12 புதிய ரகங்களை சர்வதேச மேக வரைபடக் குழுவினர் சேர்த்துள்ளனர்.

Read More »

மோடியை பாராட்டிய அவுஸ்ரேலிய பிரதமர்

பிரதமர் மோடி வரிவிதிப்பில் சிறப்பான முறையில் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளதாக, அவுஸ்ரேலிய பிரதமர் பாராட்டு தெரிவித்தார். சீர்திருத்த நடவடிக்கைகள்: நான்கு நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், மும்பையில் நடந்த தொழிலதிபர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள் யாவும், மிகச்சிறப்பானதாக உள்ளன. குறிப்பாக வரிவிதிப்பு முறையில் மேற்கொண்ட சீர்திருத்தம் சிறப்பு வாய்ந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி: மனித வரலாற்றில் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா தகவல் ...

Read More »

அகதிகள் முகாம் சென்று பார்த்தால்தான் புரியும்! -மலாலா யூசுஃப்ஸை

பாகிஸ்தானில், பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடர்ந்து தாக்கிவந்த தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடியவர், மலாலா யூசுஃப்ஸை. 2012-ம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் பள்ளிக்குச் செல்லும் வழியில் துப்பாக்கியால் சுடப்பட்டு, ஒரு வருட கால சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வந்தவர். பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய இவரது சாதனையைப் பாராட்டி, 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தனது 17-வது வயதில் இந்தப் பரிசை வென்றதன்மூலம், இளம் வயதில் நோபல் பரிசு வென்றவர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான ...

Read More »

காதல் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் படும் கஷ்டங்கள் ஏராளம்!

“சினிமாவில் முத்த காட்சிகளில் நடிப்பதையும் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதையும் ஒரு காலத்தில் பரபரப்பாக பேசினார்கள். அந்த காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் தயங்கிய காலமும் இருந்தது. ஆனால் இப்போது அவை சகஜமாகி விட்டன. முத்த காட்சிகளும் காதல் காட்சிகளும் படங்களில் சர்வசாதாரணமாக இடம் பெறுவதை பார்க்க முடிகிறது. நடிகைகளும் இந்த காட்சிகளில் நடிப்பதற்கு ஆட்சேபிப்பது இல்லை. காதல் மற்றும் முத்த காட்சிகளை ரசிகர்கள் திரையங்குகளில் சாதாரணமாக பார்த்து விட்டு போய் விடுகிறார்கள். ஆனால் அந்த காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் படும் கஷ்டங்கள் ஏராளம். படப்பிடிப்பு ...

Read More »