64வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த சண்டை வடிவமைப்புக்கான தேசிய விருதை அறிமுகம் செய்துள்ளார்கள்.
64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில்07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த சண்டை வடிவமைப்பு என்ற விருதை இம்முறை தேசிய விருதுகள் பட்டியலில் சேர்த்துள்ளார்கள்.
சிறந்த சண்டைக் கலைஞருக்கான முதல் தேசிய விருதை ‘புலிமுருகன்’ படத்தின் சண்டைக்காட்சியமைப்புகாக பீட்டர் ஹெய்ன் பெற்றுள்ளார். வைசாக் இயக்கத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்
‘புலிமுருகன்’. வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு அனைவருமே பாராட்டு தெரிவித்திருந்தார்கள். இதனை வடிவமைத்த பீட்டர் ஹெய்னுக்கு தேசிய விருது அறிவித்துள்ளார்கள்.
சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து, சண்டைப் பயிற்சியாளர்களையும் தேசிய விருது பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மனு ஒன்றை ஐஸ்வர்யா தனுஷ் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.