புதிய மேகங்கள்!

மேகங்கள் பல ரகம். ‘குமுலஸ்’ முதல், ‘சிர்ரஸ்’ வரை எல்லா ரக மேகங்களுக்கும் பெயரிட்டு, அவற்றை 10 பெரிய வகைப்பாட்டுகளில் உள்ளடக்கியது,

‘சர்வதேச மேக வரைபடம்.’ 121 ஆண்டுகளாக வெளிவரும் இந்த வரைபடத்தில், கடந்த, 30 ஆண்டுகளாக எந்த புது ரகமும் சேர்க்கப்படாமலிருந்தது. ஆனால், ஸ்மார்ட்போன், இணையம் போன்ற வசதிகள் வந்ததும், பொழுதுபோக்குக்காக மேகங்களை கவனிக்கும் தன்னார்வலர்கள், புதுவகை மேகங்களை படம்பிடித்து, அவற்றை வரைபடத்தில் சேர்க்க வேண்டும் என போராடினர்.

அண்மையில், 12 புதிய ரகங்களை சர்வதேச மேக வரைபடக் குழுவினர் சேர்த்துள்ளனர்.