குமரன்

பிரான்ஸின் புதிய ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் வாழ்த்து!

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோனுக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்டுள்ள  அவுஸ்ரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) இன்று (திங்கட்கிழமை) வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோனுக்கு நான் வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தேன். வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து அவரிடம் இருந்து பதிலும் கிடைத்தது” என தெரிவித்தார்.

Read More »

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் ஆவேசம்! வடமாகாண சபை முற்றுகை!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்று (9) வடமாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டதால், உள்ளே செல்ல முடியாது திரும்பி சென்றார். கடந்த பெப்ரவரி 27ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமக்கு இன்றைய தினமே தீர்வொன்றை வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்க வேண்டும் என்று போராட்டக்கார்கள் தெரிவித்தனர். எனினும் இது மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய ...

Read More »

அஜித் பரிசு கொடுத்த கடிகாரத்தில் பிழை – விவேக்

காமெடி நடிகர் விவேக் தனக்கு அஜித் பரிசு கொடுத்தாக கூறப்படும் கடிகாரத்தில் ஒரு பிழை இருப்பதாக தெரிவித்துள்ளார். காமெடி நடிகர் விவேக், அஜித்துடன் ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் விவேக்குக்கு அஜித் கொடுத்த பரிசு குறித்த செய்தியை வைரலாக பரவி வருகிறது. அதாவது ஒருமுறை அஜித்தும், விவேக்கும் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அஜித் கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச் விவேக்கை ரொம்பவும் கவர்ந்துள்ளதாகவும், அந்த வாட்சின் ...

Read More »

‘பேஷன் டிப்ஸ்’ தரும் செயற்கை நுண்ணறிவு!

அமேசான் நிறுவனம் உருவாக்கிய, ‘அலெக்சா’ என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை, பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமின்றி, தனிபர்களும் பயன்படுத்துவதற்காக சில கருவிகளை அறிமுகப்படுத்தியது. எக்கோ, டாட் போன்ற அந்த செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு, மேற்கத்திய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தக் கருவிகளை உரிமையாளர் தன் குரல் மூலம் கட்டுப்படுத்தலாம். அண்மையில் அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள, ‘எக்கோ லுக்’ என்ற கருவி, கேமரா வசதி கொண்டது. இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவி, உரிமையாளர் அணிந்திருக்கும் உடை, அவரது தோற்றத்திற்கு எடுப்பாக இருக்கிறதா என்பதை தன் இயந்திரக் குரல் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அதிரடி சலுகை

அவுஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அதிரடி சலுகையினை அவுஸ்திரேலிய அரசு வழங்கவுள்ளது. அதாவது மனிதாபிமான விசாக்களில் (humanitarian visas) அகதிகளைத் தனியார் தொழில் நிறுவனங்கள் அழைக்கும் திட்டத்தினை எதிர்வரும் முதலாம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் Sponsor செய்தால், சுமார் 1000 வரையிலான அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கும் ‘தனியார் sponsorship’ திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரியவருகிறது. மேலும் Centrelink பணம் ஏதாவது குறிப்பிட்ட அகதி எடுக்கும் தருணத்தில் அந்தப் பணத்தையும் sponsor செய்த தனி நபரோ அல்லது ...

Read More »

அழகான நாடு அவுஸ்திரேலியா: புகழும் டிரம்ப்!

அவுஸ்திரேலியப் பிரதமருடனான தமது உறவு மிகச் சிறப்பானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். நியூயார்க்கில் அவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை சந்தித்துப் பேசிய பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவுஸ்திரேலியா நாடு எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று டிரம்ப் கூறியதாக ஏஎஃப்பி தகவல் தெரிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல், வர்த்தகம், தேசிய பாதுகாப்பு ஒத்துழைப்பு, குடியேறிகள் பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள மிக அழகான நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்று என்று டிரம்ப் ...

Read More »

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நரகம் இதுதான்!

அவுஸ்திரேலியாவின் நவுரு தீவு ஒரு நரகம் என தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதற்கு சட்டவிரோதமாக ஆபத்தான படகுப் பயணங்கள் மேற்கொண்டவர்கள் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அகதி நடவடிக்கை தொடர்பான அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே இந்த கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளரான ரவி மேலும் கூறியதாவது; 22 நாட்கள் ஆபத்தான படகுப் பயணம் மேற்கொண்டதாகவும் ...

Read More »

கடலுக்குள் காணாமல் போன அவுஸ்ரேலிய பிரதமர்!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Harold Edward Holt பற்றி இன்று வரை அந்நாட்டு மக்கள் பேசுவதற்கு அவர் ஆட்சிகாலத்தின் போது மர்மமான முறையில் காணாமல் போனதே காரணம் ஆகும். 1966 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் பிரதமராக Harold Edward Holt பதவியேற்றார். இவரின் ஆட்சிகாலம் ஒரு ஆண்டு மட்டுமே நீடித்தது. இவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என இவரது மனைவி வெளி உலகத்திற்கு பகிரங்கமாக அம்பலப்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார். நீச்சலடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், 1967 ...

Read More »

உலக செஞ்சிலுவை நாள்: மே 8- 1948

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8-ம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948-ம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது. உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8-ம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948-ம் ...

Read More »

கையடக்க ஒலிப்படக் கருவி

லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லுாரியைச் சேர்ந்த இரு முனைவர் பட்ட மாணவர்கள், பேனா அளவுக்கே உள்ள, ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்’ எனப்படும் மீஒலி வருடியை உருவாக்கியுள்ளனர். செவி உணரா ஒலி அலைகள் மூலம் உடலுக்குள் இருக்கும் அங்கங்களை திரையில் படமாக காட்டும் திறன் கொண்டவை மீஒலி வருடி. பலவித நோய்களை அறிவதற்கு உதவுவதோடு, கருவுற்ற குழந்தையின் நலனை அறியவும் உதவும் இக் கருவி, அளவில் பெரிதாகவும், விலை அதிகமாகவும் இருப்பதால், வளரும் நாடுகளில், குறிப்பாக கிராமப்புற மருத்துவமனைகளில் இது இன்றும் எட்டாக் கனி தான். உயிரிப் ...

Read More »