அவுஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அதிரடி சலுகையினை அவுஸ்திரேலிய அரசு வழங்கவுள்ளது.
அதாவது மனிதாபிமான விசாக்களில் (humanitarian visas) அகதிகளைத் தனியார் தொழில் நிறுவனங்கள் அழைக்கும் திட்டத்தினை எதிர்வரும் முதலாம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் Sponsor செய்தால், சுமார் 1000 வரையிலான அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கும் ‘தனியார் sponsorship’ திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் Centrelink பணம் ஏதாவது குறிப்பிட்ட அகதி எடுக்கும் தருணத்தில் அந்தப் பணத்தையும் sponsor செய்த தனி நபரோ அல்லது நிறுவனமோ அல்லது சமூகக் குழுவோ மீளச் செலுத்தவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஆட்கள் பற்றாக்குறையுள்ள வியாபாரங்களின் பிரச்சினைகள் நிவர்த்தியாகுமென பிரதிக் குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.