‘பேஷன் டிப்ஸ்’ தரும் செயற்கை நுண்ணறிவு!

அமேசான் நிறுவனம் உருவாக்கிய, ‘அலெக்சா’ என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை, பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமின்றி, தனிபர்களும் பயன்படுத்துவதற்காக சில கருவிகளை அறிமுகப்படுத்தியது.

எக்கோ, டாட் போன்ற அந்த செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு, மேற்கத்திய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தக் கருவிகளை உரிமையாளர் தன் குரல் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அண்மையில் அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள, ‘எக்கோ லுக்’ என்ற கருவி, கேமரா வசதி கொண்டது. இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவி, உரிமையாளர் அணிந்திருக்கும் உடை, அவரது தோற்றத்திற்கு எடுப்பாக இருக்கிறதா என்பதை தன் இயந்திரக் குரல் மூலம் சொல்லும்.

உடை பொருத்தமாக இல்லாவிட்டால், அமேசான் இணையதளத்தில் உள்ள உடைகளை அலசி, அவருக்கு பொருத்தமான உடையை பரிந்துரை செய்யும்.செயற்கை நுண்ணறிவுக்கு இன்றைய லேட்டஸ்ட் பேஷன் தகவல்கள் தெரிந்திருப்பது அசத்தலாக இருக்கலாம்.

ஆனால், ஒரு மென்பொருள், மனிதர்களின் தோற்றத்தை எடை போட அனுமதிப்பது தார்மீக ரீதியில் சரியானதா? என்று மேற்குலக ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. உரிமையாளர் விருப்பப்படி வீடுகளை கட்டித்தர முடியும்.