அவுஸ்திரேலியப் பிரதமருடனான தமது உறவு மிகச் சிறப்பானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க்கில் அவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை சந்தித்துப் பேசிய பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“அவுஸ்திரேலியா நாடு எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று டிரம்ப் கூறியதாக ஏஎஃப்பி தகவல் தெரிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல், வர்த்தகம், தேசிய பாதுகாப்பு ஒத்துழைப்பு, குடியேறிகள் பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள மிக அழகான நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்று என்று டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் எப்போது அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal