அவுஸ்திரேலியாவின் நவுரு தீவு ஒரு நரகம் என தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதற்கு சட்டவிரோதமாக ஆபத்தான படகுப் பயணங்கள் மேற்கொண்டவர்கள் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அகதி நடவடிக்கை தொடர்பான அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே இந்த கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளரான ரவி மேலும் கூறியதாவது;
22 நாட்கள் ஆபத்தான படகுப் பயணம் மேற்கொண்டதாகவும் பின்னர் நவுறு தீவில் இரண்டு வருடங்கள் எவ்வாறு செலவிட்டேன் என அவர் தெரிவித்தார்.
மேலும் தஞ்சம் கோருவோர் தடுத்து வைக்கப்படுவதன் மூலம் மனித உரிமை மீறப்படுகிறது எனவும் அவுஸ்திரேலியாவில் இது தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal