குமரன்

அவுஸ்திரேலிய வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT மாநிலங்களில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை இந்த சட்டம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த ...

Read More »

பெண்ணாக பிறந்ததை சுமையாக கருதிய சமூகத்தில் படிப்பால் சாதித்த ஆப்கானிஸ்தான் பெண்!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த நர்கிஸ் தராகி தனது பெற்றோருக்கு ஐந்துவது பெண் குழந்தையாக பிறந்தபோது, அக்கம் பக்கத்தினர் அவரை அதே ஊரை சேர்ந்த வேறொருவரிடம் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக ஆண் குழந்தையை வாங்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தினர். தற்போது 21 வயதாகும் நர்கிஸ், தனது பெற்றோர் தன்னை தொடர்ந்து வளர்ப்பதற்கு எடுத்த முடிவு சரியானது என்பதை தனது சாதனைகளின் மூலம் நிரூபித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்விக்காகவும், வளர்ச்சிக்காகவும் தற்போது பணியாற்றி வரும் நர்கிஸ் பிபிசியின் 2018ஆம் ஆண்டிற்கான 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு எனது ...

Read More »

ஆஸ்திரேலியா நாட்டு கடலில் மூழ்கி இந்தியாவை சேர்ந்த 3 பேர் பலி!

ஆஸ்திரேலியா நாட்டின் தென்பகுதியில் உள்ள அடிலெய்ட் அருகே கடலில் குளிக்கச் சென்ற 3 இந்தியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கவுசுதீன், ராஹத், ஜுனைத் ஆகியோர் ஆஸ்திரேலியா நாட்டின் அடிலெய்ட் நகரின் அருகாமையில் உள்ள சுற்றுலாத்தலமான மோனா கடற்கரை பகுதிக்கு சென்றனர். நேற்று அங்கு கடலில் நீந்தி குளித்து கொண்டிருந்தபோது அவர்கள் மூவரையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. நீரில் மூழ்கி மூச்சித்திணறி உயிரிழந்த கவுசுதீன்(45), ராஹத்(35) ஆகியோரின் பிரேதங்களை மீட்ட பாதுகாப்பு படையினர் ஜுனைத் ...

Read More »

தொன்மைக் கிராமமான தென்னமரவடி!-ஜெரா

இலங்கையின் கடந்த நாள்கள், மிக பரபரப்பானவை. ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடைப்பட்ட போட்டியில், நாட்டு மக்கள் சிக்கியிருந்தனர். அதேசமநேரத்தில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இருக்கின்ற தென்னமரவடிக் கிராமம், அபாயமொன்றை எதிர்கொண்டிருந்தது. ஜனநாயத்தை மீட்பதற்காக, நாட்டின் பிற பாகங்களில் உள்ள மக்கள் பதைபதைத்துக் கொண்டிருந்ததைப்போல, தென்னமரவடிக் கிராம மக்கள், தங்கள் பூர்வீகக் கிராமத்தைக் காப்பதற்குப் பதறிக்கொண்டிருந்தனர். இன்று தென்னமரவடி என இக்கிராமம் அழைக்கப்பட்டாலும், “தென்னவன் மரபு அடி” என்ற அர்த்தப் பிரிப்பைக் கொண்டுள்ளதென, அங்கு வசிக்கும் மூத்தவர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, சோழர் காலத்தில் ...

Read More »

மிஸ் யுனிவர்ஸ் போட்டி- பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு

பாங்காக்கில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடந்தது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர். நேற்று இறுதி சுற்று போட்டி நடைபெற்றது. அதில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் அழகி டெமி லெய்க் நீல்- பீட்டர்ஸ் கிரீடம் அணிவித்தார். தென் ஆப்பரிக்காவை ...

Read More »

ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்தது!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது. 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ...

Read More »

எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது!

ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும்  இந்த அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது. ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது. எனவே  எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததை  ...

Read More »

கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பணிகளிற்காக மட்டுமே 2000 காவல் துறையினர்  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. பொது மக்களின் பாதுகாப்பிற்காக சிவில் உடையில் காவல் துறை  கொழும்பு நகரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கொழும்பு நகர் உள்ளிட்ட அனைத்து பிரதான நகரங்களில் ஏற்படும் வாகன நெரிசல்களை தடுக்க காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் விஷேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் ...

Read More »

புத்தம் புதிய ஒ.எஸ்., டிஸ்ப்ளே நாட்ச் கொண்ட ஹானர் ஸ்மார்ட்போன்

ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் சீன வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது. ஹுவாய் ஹானர் பிரான்டு விரைவில் தனது ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஹானர் 8ஏ பட்ஜெட் ஸ்மார்ட்போன் JAT-TL00 மற்றும் JAT-AL00 என்ற மாடல் நம்பர்களுடன் TENAA வலைதளத்தில் சான்று பெற்றுள்ளது. சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனில் வாட்டர்-டிராப் வடிவம் கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், டூ-டோன் டிசைன் மற்றும் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கிறது. ...

Read More »

நல்லிணக்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு! – அவுஸ்திரோலியா

சிறிலங்கா அரசியல் சிக்கல் நிலை தீர்க்கப்பட்டமையை தொடர்ந்து சமாதானத்தை நிலைநாட்டல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தல் ஆகியவற்றுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாக  சிறிலங்காவிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து வந்த அரசியல் நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள் தமது அக்கறையினை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தன. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவை தொடர்ந்து, மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதுடன் அரசியல் சிக்கல்நிலை முடிவிற்கு வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ...

Read More »