அவுஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT மாநிலங்களில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை இந்த சட்டம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது.
21ஆம் திகதி நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் பாடசாலை நாள் என்பதால் school zone-பள்ளி வலயங்களில் வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points-க்கு மேலதிகமாக இன்னுமொரு demerit point-ஐ இழக்க நேரிடும்.
இதேவேளை வீதி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.