ஆஸ்திரேலியா நாட்டு கடலில் மூழ்கி இந்தியாவை சேர்ந்த 3 பேர் பலி!

ஆஸ்திரேலியா நாட்டின் தென்பகுதியில் உள்ள அடிலெய்ட் அருகே கடலில் குளிக்கச் சென்ற 3 இந்தியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கவுசுதீன், ராஹத், ஜுனைத் ஆகியோர் ஆஸ்திரேலியா நாட்டின் அடிலெய்ட் நகரின் அருகாமையில் உள்ள சுற்றுலாத்தலமான மோனா கடற்கரை பகுதிக்கு சென்றனர்.

நேற்று அங்கு கடலில் நீந்தி குளித்து கொண்டிருந்தபோது அவர்கள் மூவரையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. நீரில் மூழ்கி மூச்சித்திணறி உயிரிழந்த கவுசுதீன்(45), ராஹத்(35) ஆகியோரின் பிரேதங்களை மீட்ட பாதுகாப்பு படையினர் ஜுனைத் பிரேதத்தை தேடி வருகின்றனர்.