இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது. 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
இதனால் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் 2வது இன்னிங்சில் ஸ்டார்க், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதையடுத்து, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 3வது ஆட்டம் மெல்போர்னில் 26-ம் திகதி தொடங்குகிறது.