பாங்காக்கில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடந்தது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இறுதி சுற்று போட்டி நடைபெற்றது. அதில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் அழகி டெமி லெய்க் நீல்- பீட்டர்ஸ் கிரீடம் அணிவித்தார்.
தென் ஆப்பரிக்காவை சேர்ந்த டாமரின் கிரீன், வெனிசுலாவை சேர்ந்த ஸ்தெபானி குட்டரெஸ் ஆகியோர் 2-வது இடங்களை பிடித்தனர்.
இந்த போட்டியில் இந்தியா சார்பில் நேகல் சுதாசமா கலந்து கொண்டார். அவரால் முதல் 20 இடங்களுக்குள் கூட வரமுடியவில்லை.
Eelamurasu Australia Online News Portal