வெள்ளை மாளிகையின் ஊடகச்செயலாளர் கேய்லேய் மக்எனானி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது நான் கொரோனா வைரசினால் பாதிக்கப்படவில்லை என முடிவுகள் வெளியான போதிலும் இன்றுநான் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளேன் என முடிவுகிடைத்துள்ளது என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசிற்கான அறிகுறிகள் எதுவும் தன்னிடம் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த நிருபரும் தயாரிப்பாளரும் பத்திரிகை துறை சார்ந்தவர்களும் என்னுடன் தொடர்பிலிருந்தனர் என வெள்ளை மாளிகை தெரிவிக்கவில்லை எனவும் வெள்ளை ...
Read More »குமரன்
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 246 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணி யாற்றி வந்த மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகளின் படி கொரொனா தொற்றாளர் கள் 246 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வர்களின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »ரிசாத்தின் சகோதரருக்கு பயங்கரவாதத்துடன் நேரடி தொடர்புகள் இல்லையாம்!
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாட் பதியுதீனிற்கு பயங்கரவாதிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என விசாரணைகளின் பின்னர் உறுதியான பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார் என உள்நாட்டுபாதுகாப்பிற்கான இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ரியாட் பதியுதீனின் விடுதலை குறித்து கேள்விஎழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பொலிஸார் இது குறித்து வழங்கியுள்ள அறிக்கை முரணாணதாக காணப்படுகின்றது என தெரிவித்து விளக்கம் கோரினார். இதற்கு பதிலளித்த சமல்ராஜபக்ச முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாட் ...
Read More »அவுஸ்திரேலியாவில் இலங்கைமாணவி விபத்தின் மூலம் உயிரிழப்பதற்கு காரணமான நபருக்கு பத்து வருட சிறை
அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் இலங்கை மாணவி விபத்தின் காரணமாக உயிரிழப்பதற்கு காரணமான நபருக்கு நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. மொனால் பல்கலைகழகத்தில் கல்விகற்ற நிசாலி பெரேரா வெலிங்டன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். இன்றைய நீதிமன்ற அமர்வில் இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி லிஸ் கையினர் விபத்துக்கு காரணமான சேன் கொச்ரனே என்ற நபர் நிசாலியின் குடும்பத்தை நிரந்தரமாக சிதைத்துவிட்டார் என தெரிவித்துள்ளார். மிகவும் நேசிக்கப்பட்ட ஒரேயொரு மகளின் மரணத்திற்கு காரணமாகிவிட்டீர்கள் என சேன் ...
Read More »மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு செயற்திட்டம்
2014 செப்டெம்பரில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் அன்றைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை கூட்டாக ஆரம்பித்துவைத்தார்கள்.கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலத்தை மீட்டு, இலங்கையின் தலைநகர் கொழும்புக்கான நிதித்துறை, சுற்றுலாத்துறை, விநியோகங்கள் ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளை ஒருங்கிணைக்கும் புத்தம் புதிய மத்திய வர்த்தக மாவட்டமொன்றை நிர்மாணிப்பதே இந்த திட்டமாகும். ஆரம்பித்தவைக்கப்பட்டு 6 வருடங்கள் கடந்த நிலையில், இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக இப்போது விளங்கும் கொழும்பு துறைமுகநகரத்திட்டம் உள்நாட்டு மற்றும் பிராந்திய பொருளாதாரத்தை மீளவடிவமைப்பதற்கான எதிர்கால ...
Read More »காதலில் விழுந்த காஜல் அகர்வால்…
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2-வில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது சமூக ...
Read More »நியுசிலாந்து பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை தளர்வு!
நியுசிலாந்து பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கடடுப்பாட்டு நடவடிக்கையாக பல்வேறு நாடுகள் பயணத்தடை விதித்திருந்தது. இந்த நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ளதன் காரணமாக பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Read More »நியுசிலாந்தில் சமூகத் தொற்று இல்லை : பிரதமர் ஜெசிந்தா அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமான முறையில் எதிர்கொண்டுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளார். நியுசிலாந்து பிரதமர் அலுவலகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியுசிலாந்தில் கடந்த 102 நாட்களுக்குள் சமூகத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Read More »20வது அரசமைப்பு திருத்தச் சட்டம் தமிழ் மக்களை அழித்தொழிக்கும்!
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர் அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா மனித ...
Read More »20ஆம் திருத்தச் சட்டமூல மனுக்கள் மீதான பரிசீலனை இன்று
அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த மனுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான 4ஆம் நாள் பரிசீலனை நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ , ப்ரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், பரிசீலனைக்கு ...
Read More »