வெள்ளை மாளிகையின் ஊடகச்செயலாளர் கேய்லேய் மக்எனானி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது நான் கொரோனா வைரசினால் பாதிக்கப்படவில்லை என முடிவுகள் வெளியான போதிலும் இன்றுநான் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளேன் என முடிவுகிடைத்துள்ளது என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசிற்கான அறிகுறிகள் எதுவும் தன்னிடம் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த நிருபரும் தயாரிப்பாளரும் பத்திரிகை துறை சார்ந்தவர்களும் என்னுடன் தொடர்பிலிருந்தனர் என வெள்ளை மாளிகை தெரிவிக்கவில்லை எனவும் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நான் தனிமைப்படுத்தலை ஆரம்பிக்கப்போகின்றேன் தொலைவிலிருந்து பணியாற்றப் போகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal