20ஆம் திருத்தச் சட்டமூல மனுக்கள் மீதான பரிசீலனை இன்று

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த மனுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான 4ஆம் நாள் பரிசீலனை நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ , ப்ரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்றைய தினம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.