குமரன்

அவுஸ்ரேலிய மணமகன் ஈரோடு பெண் திருமணம்!

அவுஸ்ரேலியாவில் காதல் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி மைதிலி. இவர்களுக்கு மகிமா என்கிற மகளும், ராதேஷ் என்கிற மகனும் உள்ளனர். கிருஷ்ணன் கடந்த 1996-ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடு அடிலேட் நகரத்துக்கு தனது குடும்பத்துடன் சென்று குடியேறினார். அங்கு உள்ள ஒரு கல்லூரியில் அவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் மகிமாவும், அவருடைய தம்பி ராதேசும் அவுஸ்ரேலியாவிலேயே தங்களது பள்ளிப்படிப்பை தொடர்ந்தனர். மகிமா எம்.எஸ்சி., பி.எச்டி. முடித்துவிட்டு அடிலேட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ...

Read More »

25 வருடங்கள் கழித்து மலையாள திரையுலகில் மீண்டும் நுழையும் ஏ.ஆர்.ரகுமான்..!

ஏ.ஆர்.ரஹ்மான் யோதா என்ற ஒரே ஒரு மலையாளப்படத்திற்கு மட்டும்தான் இசையமைத்திருக்கிறார். 1992ல் வெளியான இந்தப்படத்தில் மோகன்லால், மதுபாலா நடிக்க, சங்கீத்சிவன் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். அப்போதுதான் தமிழில் ரோஜா படத்திற்கு இசையமைத்ததின் மூலம் பிரபலமாகியிருந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மலையாளத்தில் இருந்து மோகன்லால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வரவே அதை உடனே ஏற்றுக்கொண்டார். ஆனால் அதன்பின் இந்த 25 வருடங்களில் மற்றொரு மலையாள படத்துக்கு அவர் இதுவரை இசையமைக்கவே இல்லை. ஆனால் இப்போது மீண்டும் மலையாள படத்திற்கு இசையமைப்பாளர் என்கிற பேச்சு மலையாள திரையுலகில் அடிபட்டு வருகிறது. மோகன்லால் ...

Read More »

‘டான்வாஸ்’ உணர் திரை

தொடு திரைகள் வந்து விசைப் பலகைகள், மவுஸ் போன்றவற்றுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டன. திரையில் அடுத்த புரட்சி என்ன? ‘ஹாப்டிக் ஸ்க்ரீன்’ எனப்படும், தொழில்நுட்பம் தான். வழக்கமான தொடு திரை, தட்டையாக, பளிங்கு கல் போல இருக்கும். ஆனால், ‘டான்வாஸ்’ உருவாக்கியிருக்கும் புதிய தொழில்நுட்பத்தில், திரையின் மேற்பரப்பில் நுண்ணிய மேடு, பள்ளங்களை உருவாக்க முடியும். இதனால், திரையுடன் உராயும் விரல்களால் வழவழப்பு போன்ற உணர்வுகளை பெற முடியும். டான்வாசின் உணர் திரையில் தெரியும் ஜீன்ஸ் துணி உருவத்தின் மீது விரலை வைத்தால், டெனிம் துணியை தொடுவது ...

Read More »

அவுஸ்ரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையி்லான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த அவுஸ்ரேலியா 48.2 ஓவரில் 220 ரன்கள் சேர்த்து  ஆல்அவுட் ஆனது. பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கப்டன் மொகமது ஹபீஸ் தொடக்க வீரராக களம் இறங்கி ...

Read More »

வீரம் விளைந்த வல்வெட்டித்துறை வானில் வித்தியாசமான பட்டங்கள் பறந்தன

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நேற்று(14) மாலை நடத்தப்பட்ட பட்டப் போட்டியில் வித்தியாசமான உருவங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன. வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்றுமாலை நடந்த இந்தப் பட்டப் போட்டியில், பெருமளவு இளைஞர்களும் சிறுவர்களும், பங்கேற்று, தாம் தயாரித்த பட்டங்களை பறக்கவிட்டனர். இந்தப் பட்டப்போட்டியைக் காண, யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலானோர் வல்வெட்டித்துறையில் ஒன்று கூடியிருந்தனர்.

Read More »

உலகின் மிகப்பெரிய 4K வளைந்த மானிட்டர் வெளியீடு

பிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4K மானிட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. பிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4K மானிட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 40 இன்ச் அளவு கொண்ட இந்த மானிட்டர் 10-பிட் பேனல் மற்றும் 3840×2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் அறிமுகம் செய்துள்ள இந்த மானிட்டர் BDM4037UW என பெயரிடப்பட்டுள்ளது. பிலிப்ஸ் BDM4037UW மானிட்டர் அதிக துல்லியமான படங்களை பிரதிபலிக்க VA பேனல்களை பயன்படுபடுத்துகிறது. இத்துடன் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பிக்சல் அமைப்பு தொழில்நுட்பம் 178/178 கோணத்திலும் பார்க்கும் வசதியை வழங்குகிறது. அல்ட்ரா வைடு ...

Read More »

‘ராவணன்’ படப் பாடலுக்கு மறுவடிவம் தந்த சுருதி ஹாசன்

மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை ஷ்ருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார். மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை சுருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார். எம்.டி.வி. தயாரித்துள்ள ’ராயல் ஸ்டாக் பேரல் சீசன் சிக்ஸ்’ இசை நிகழ்ச்சிக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தப் பாடலை பாடிய அனுபவம் தொடர்பாக சுருதி ஹாசன் ...

Read More »

கழுத்து பகுதிக்கு கீழ் இயக்கம் இல்லாத இலங்கை இளைஞன் சாதனை

அவுஸ்ரேலிய ஊடகங்கங்களின் பிரபலியமாக  மாறி உள்ளார் இலங்கையரான பி.தினேஸ். இவர் பிரிஸ்பேன் பல்கலைக்கழகத்தில் பயின்று வைத்திய கலாநிதியாக வெளியேறி உள்ளார். ஆயினும் இவரின் கதை வேறு. இவர் மூன்றாம் வருடம் படித்து கொண்டிருந்தபோது பாரிய கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இதனால் இவரின் நெஞ்சு பகுதிக்கு கீழ் எந்தவொரு இயக்கமும் இல்லை. இருப்பினும் பல சவால்களை முறியடித்து தொடர்ந்து படித்து வைத்தியராகி உள்ளார். இவரின் மகத்தான சாதனை ஏனையோருக்கு முன்னுதாரணமாகி உள்ளன.

Read More »

அவுஸ்ரேலியா ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாமான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். டென்னிஸ் போட்டியில் மிகவும் பிரசித்து பெற்றது கிராண்ட்சிலாம் போட்டிகளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் நடைபெறும். இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாமான அவுஸ்ரேலிய  ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருகிற 29-ந்தேதிவரை ...

Read More »

ஐ.தே.க வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது!

ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது என தெரிவித்துள்ள கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தேர்தலை எதிர்நோக்க அச்சம் காரணமாகவோ அல்லது வேறு காரணிகளினாலோ இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்து வருவதாகக் குறி;பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் ஏனைய பிரச்சினைகள் நாட்டில் நிலவிய காலத்திலும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தந்திரோபய அடிப்படையில் தேர்தல்கள் ஒத்தி ...

Read More »