ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது என தெரிவித்துள்ள கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தேர்தலை எதிர்நோக்க அச்சம் காரணமாகவோ அல்லது வேறு காரணிகளினாலோ இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்து வருவதாகக் குறி;பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் ஏனைய பிரச்சினைகள் நாட்டில் நிலவிய காலத்திலும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தந்திரோபய அடிப்படையில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.