தொடு திரைகள் வந்து விசைப் பலகைகள், மவுஸ் போன்றவற்றுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டன.
திரையில் அடுத்த புரட்சி என்ன? ‘ஹாப்டிக் ஸ்க்ரீன்’ எனப்படும், தொழில்நுட்பம் தான். வழக்கமான தொடு திரை, தட்டையாக, பளிங்கு கல் போல இருக்கும். ஆனால், ‘டான்வாஸ்’ உருவாக்கியிருக்கும் புதிய தொழில்நுட்பத்தில், திரையின் மேற்பரப்பில் நுண்ணிய மேடு, பள்ளங்களை உருவாக்க முடியும்.
இதனால், திரையுடன் உராயும் விரல்களால் வழவழப்பு போன்ற உணர்வுகளை பெற முடியும். டான்வாசின் உணர் திரையில் தெரியும் ஜீன்ஸ் துணி உருவத்தின் மீது விரலை வைத்தால், டெனிம் துணியை தொடுவது போலவே விரல்களால் உணரலாம்.
இது போன்ற திரைகள், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ செய்பவர்களுக்கு, இந்தத் திரை உடனே பிடித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.