பிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4K மானிட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4K மானிட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 40 இன்ச் அளவு கொண்ட இந்த மானிட்டர் 10-பிட் பேனல் மற்றும் 3840×2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் அறிமுகம் செய்துள்ள இந்த மானிட்டர் BDM4037UW என பெயரிடப்பட்டுள்ளது.
பிலிப்ஸ் BDM4037UW மானிட்டர் அதிக துல்லியமான படங்களை பிரதிபலிக்க VA பேனல்களை பயன்படுபடுத்துகிறது. இத்துடன் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பிக்சல் அமைப்பு தொழில்நுட்பம் 178/178 கோணத்திலும் பார்க்கும் வசதியை வழங்குகிறது. அல்ட்ரா வைடு கலர் மற்றும் 85% NTSC அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
மல்டி வியூ அம்சம் மூலம் நான்கு இன்புட்களை வழங்கி அனைத்திலும் ஃபுல் எச்டி தரத்தில் பயன்படுத்த முடியும். இதில் புகைப்படங்களை வரிசைப்படுத்த இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று கட்டுப்பாட்டு அறைகளில் பயன்படுத்துவது போன்று உள்ளது. மற்றொன்று திரையின் ஒரு பகுதியில் வீடியோவையும் மற்ற இடங்களில் பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் உள்ளது.
ஏற்கனவே எதிர்பார்த்தை போன்று 4K மானிட்டரில் W-LED பேக்லிட் மற்றும் பிலிப்ஸ் ஃபிளிக்கர்-ஃபிரீ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கண் சோர்வு ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை VGA, டிஸ்ப்ளேபோர்ட் x 2, எச்டிஎம்ஐ 1.4 – MHL x1, HDMI 2.0 – MHL x1, யுஎஸ்பி 3.0×4, ஹெட்போன் அவுட் மற்றும் 5 வாட் பில்ட் இன் ஸ்பீக்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.