மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையி்லான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த அவுஸ்ரேலியா 48.2 ஓவரில் 220 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கப்டன் மொகமது ஹபீஸ் தொடக்க வீரராக களம் இறங்கி 72 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த பாபர் ஆசம் 34 ரன்களும், சோயிப் மாலிக் அவுட்டாகாமல் 42 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 47.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சோயிப் மாலிக் பந்தை கட் செய்த காட்சி
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. 72 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவி புரிந்த மொகமது ஹபீஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3-வது போட்டி பெர்த்தில் 19-ந்திகதி நடக்கிறது.
Eelamurasu Australia Online News Portal