குமரன்

அமெரிக்காவில் லசந்த மகள் மனு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தடுத்து நிறுத்துவதற்கான கோத்தபாய ராஜபக்சவின் முயற்சிகளிற்கு எதிராக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க மனுதாக்கல் செய்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கடந்த வாரம் கோத்தபாய ராஜபக்ச கலிபோர்னியாவின் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திரிபுபடுத்தப்படலாம்,பரப்புரை செய்யப்படலாம் ஊதிப்பெருப்பிக்கப்படலாம் என கோத்தபாய ராஜபக்சவி;ன் சட்டத்தரணிகள் தமது மனுவில் தெரிவித்திருந்தனர். இலங்கையின் தேர்தலில் நீதிமன்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் முடிவுகளை ...

Read More »

மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா?

செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக இயக்கும் படத்தில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் ...

Read More »

‘5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை!

5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என, இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. பதில் நிறைவேற்று பணிப்பாளர் சுரங்கனி ஆரியவங்ச, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை கூறியுள்ளார். இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் முன்னெடுத்த ஆய்வின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களின் 87 சதவீதமானவர்கள் பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

குடும்பத்தவர்கள் ஐவரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!

அமெரிக்காவின் அலபாமாவில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்ப உறுப்பினர்கள் ஐவரை சுட்டுக்கொன்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளான். அலபாமாவின் எல்க்மொன்டில் உள்ள தனது வீட்டில் இந்த கொலைகளை செய்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான். தந்தை சிற்றன்னை மற்றும் சகோதரர்களை சுட்டுக்கொன்றதாக சிறுவன் தெரிவித்துள்ளான். துப்பாக்கி பிரயோகம் அமெரிக்க நேரடிப்படி திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அவசரசேவை காவல்துறையினரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட சிறுவன் தனது வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்பதாகவும் தான் கீழ் தளத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளான். காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்றவேளையும் சிறுவன் இதனை தெரிவித்துள்ளான். வீட்டில் ...

Read More »

தெரிவுக்குழுவிடம் சாட்சியமளிக்க மைத்திரி இணக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு சிறிலங்கா   ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுப்பதுடன், ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசாரணைகளை நடத்தவும் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவுக்குழு மூலமாக தெரிய வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற  தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு தொடர்ச்சியாக பல தரப்பினரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ள நிலையில் இறுதியாக ஜனாதிபதியை தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறும் அழைப்பு ...

Read More »

தமிழ் குடும்பத்தை நாடு கடத்த தயாராகின்றது அவுஸ்திரேலியா!

ஏபிசி தமிழில் – ரஜீபன் தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியா நாடு கடத்துவதற்கு தயாராகும் அதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் தாங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாக தமிழர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் என ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அவுஸ்திரேலியாவின் ஏபிசி நியுஸ் மேலும் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் குயின்ஸ்லாந்தின் பைலோ நகரிலிருந்து தமிழ் குடும்பத்தினை இலங்கைக்கு நாடு கடத்த தயாராகின்றது அதேவேளை அவர்கள் அங்கு சித்திரவதைக்கு உள்ளாகலாம் என அவர்களிற்கு சார்பாக குரல்கொடுப்பவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு வயது தருணிகாவே இந்த விவகாரத்தில் முக்கியமானவராக ...

Read More »

‘ ஒரு நாடு, இரு சமூக அமைப்புமுறைகள் ‘ பயன்தரவில்லை!

சீனாவின் ஹொங்கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்களை மூளவைத்த சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டமூலம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது.ஆனால், மார்ச் மாதத்தில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் தொடர்கின்றன ;அவற்றின் தீவிரம் அதிகரித்து பரவலாக வன்முறைகளும் இடம்பெறகின்றன.அதனால் கிழக்காசியாவின் பொருளாதார இயக்கமையம் என்று வர்ணிக்கப்படும் அந்த பிராந்தியம் முடங்கிப்போய்க்கிடக்கிறது. சீனாவில் இருந்து தப்பியோடிவரும் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதற்கு வசதியான ஒரு ‘ புகலிடமாக ‘ ஹொங்கொங் மாறுவதற்கு காரணமாக இருக்கும் சட்ட ஓட்டைகளை மூடுவதை நோக்கமாகக்  கொண்டதே சீன நாடுகடத்தல் சட்டமூலம்.ஆனால், அதேவேளை சீனாவின் கொள்கைகளை  எதிர்க்கும் ஹொங்கொங் ...

Read More »

ஜோதிகா படத்தை பாராட்டிய மலேசிய அமைச்சர்!

நடிகை ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் பாராட்டியுள்ளார். கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசி’. விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஜூலை 5ந்தேதி இந்த படம் வெளியானது. ராட்சசி படத்தை பார்த்த மலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் படத்தை பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...

Read More »

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபலங்கள்!

நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 பிரபலங்கள் விருந்தாளிகளாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். அவரை ரகசிய அறையில் தங்க வைக்க பிக்பாஸ் திட்டமிட்டு இருந்த நிலையில் அதை மறுத்து கஸ்தூரி வெளியேறினார். கஸ்தூரி வெளியேற்றப்பட்டதை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது. இதிலிருந்து ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார். ...

Read More »

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றம்

ஓல்டு டிராபோர்டில் நாளை தொடங்கும் ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஹெட்டிங்லேயில் 359 ரன்கள் வெற்றி இலக்கை இங்கிலாந்து விரட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இந்நிலையில் 4-வது டெஸ்ட் நாளை ஓல்டு டிராபோர்டில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு ...

Read More »