ஓல்டு டிராபோர்டில் நாளை தொடங்கும் ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஹெட்டிங்லேயில் 359 ரன்கள் வெற்றி இலக்கை இங்கிலாந்து விரட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் 4-வது டெஸ்ட் நாளை ஓல்டு டிராபோர்டில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு கிரேக் ஓவர்ட்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தால் ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஓவர்ட்டன் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal