அவுஸ்ரேலியாவை ஒயிட்வாஷ் செய்வோம் என தென் ஆப்பிரிக்கா அணியின் கப்டன் டுபெலிசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறித்து தென்ஆப்பிரிக்கா கப்டன் டுபெலிசிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். டெஸ்ட் தொடரை வென்ற நாங்கள் கடைசி டெஸ்டில் வெல்வோம். 3-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியாவை ஒயிட்வாஷ் செய்வதே எங்களது இலக்காக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Read More »குமரன்
ஸ்மார்ட்போன் பாதுகாப்புக்கு 5 வழிகள்!
ஹேக்கர்களும், சைபர் குற்றவாளிகளும் இப்போது கம்ப்யூட்டர்களை மட்டும் குறிவைப்பதில்லை. ஸ்மார்ட்போன் மீதும் கவனத்தைத் திருப்பியுள்ளனர். ஸ்மார்ட்போனுக்கான தேவையும், அதன் பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மீதான தாக்குதலும் அதிகரித்திருக்கின்றன. மால்வேர், ஃபிஷ்ஷிங் மோசடி, ரான்சம்வேர் எனப் பலவிதங்களில் விஷமிகள் ஸ்மார்ட்போன்களைக் குறிவைத்து, அதில் உள்ள முக்கியத் தகவல்களை அபகரிக்க முயன்று கைவரிசை காட்டுகின்றனர். எனவே ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது அவசியம். எப்படி? கிளிக் செய்யும் முன்… இணைப்புகளைப் பார்த்தவுடன் கிளிக் செய்வது இயல்புதான். குறுஞ்செய்திகள், ஃபேஸ்புக் செய்தி, இமெயில்கள் ...
Read More »‘தள்ளிப்போகாதே’ பாடலை கண்டு ரசித்த ஏ.ஆர்.ரகுமான்
அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்றுள்ள ‘தள்ளிப்போகாதே’ பாடலை ரசிகர்களுடன் ஏ.ஆர்.ரகுமான் கண்டுகளித்துள்ளார். சிம்பு நடிப்பில் பல தடைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளிவந்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. கௌதம்மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு-கவுதம்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் வெளிவந்த இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்புகளையும் இந்த படம் ஓரளவுக்கு திருப்தியை கொடுத்திருக்கிறது எனலாம். வசூலிலும் இப்படம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் மிகவும் ...
Read More »அசாஞ்சேவிடம் விசாரணை நடத்திய ஸ்வீடன் அதிகாரிகள்
லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஜூலியன் அசாஞ்சேவிடம், பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (வயது 45) மீது நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்தது. இதனைதொடர்ந்து, அவர் லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். இதற்கிடையே ஸ்வீடனில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்சே மீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால், அவர் கைது ...
Read More »70 ஆண்டுக்குப் பிறகு வானில் நிகழும் ‘சூப்பர் நிலவு’
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ ஸ்பெயின் நாட்டில் தெரிய தொடங்கியுள்ள்து. பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தை காட்டிலும் சற்று பெரியதாக காட்சி அளிப்பதை அறிவியல் வல்லுநர்கள் ‘சூப்பர் நிலவு’ என அழைக்கிறார்கள். இந்த அதிசய நிகழ்வில் நிலா வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும் பிரகாசமாக தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 1948 ஆம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியதாகவும், அதன்பின்னர் இன்று மீண்டும் தோன்றி உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. ...
Read More »எகிப்து கல்லறையில் 2500 வயது மம்மி கண்டுபிடிப்பு
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வண்ணமயமான மம்மி, எகிப்து நாட்டின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன. எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், பதனிடலில் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை. ...
Read More »மோடியால் அல்லாடும் மக்களுக்கு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் நடிகை
நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான ரம்யா வங்கிகள், தபால் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவோருக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உதவியுள்ளார். கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டார். இதையடுத்து பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் தவமாய் தவமிருந்து வருகிறார்கள்.
Read More »அவுஸ்ரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளருக்கு நீதி கிடைத்தது!
அவுஸ்ரேலியாவின் தொழிலாளர் நலன்சார் அமைப்பான Fair Work, இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவருக்கு, குறைந்த ஊதியத்தை வழங்கிய நிறுவனம் ஒன்றிடமிருந்து, சுமார் 8,711 டொலர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. மெல்பேர்ணிலுள்ள Shelly Removals and Storage என்ற நிறுவனத்தில் கடந்த வருடம் அக்டோபர் முதல் இவ்வருடம் ஜனவரி வரை இலங்கையிலிருந்து வந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பணிபுரிந்துள்ளார். இவர் வாகனத்தில் சென்று தளபாடங்களை ஏற்றி இறக்கும் பணியில் வாரமொன்றுக்கு 50 மணிநேரங்கள் ஈடுபட்டுள்ளார். ஆனால் இவருக்கு மணிக்கு 18 டொலர் என்ற கணக்கின்படி 30-38 மணித்தியாலங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ...
Read More »ஐபோன் பாவனையாளர்களுக்கு புதிய தகவல்
பேபால் நிறுவனமானது ஒன்லைன் ஊடான பணக் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக மேற்கொள்ளும் முன்னணி நிறுவனமாகும். இந் நிறுவனம் தற்போது குறித்த சேவையினை ஆப்பிள் சிறி ஊடாக மேற்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.இதன்படி ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள ஆப்பிள் சிறி ஊடாக எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும். இதனால் விரும்புவர்களுக்கு பணம் அனுப்பிக்கொள்ள முடியும். இவ் வசதியானது முதற்கட்டமாக 30 நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அந்நாடுகளாக Australia, Austria, Belgium (French and Dutch), Brazil, Canada (English and French), China, Denmark, Finland ...
Read More »உங்கள் ‘பிறந்த திகதி’க்கு இதுதான் சரியான ‘தொழில்’..!
நியூமராலஜி என்ற எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குணம் உண்டு. 1 முதல் 9 வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கு என ஒருசில குணங்கள் இருக்கின்றது என்றும், அந்தத் திகதிகளில் பிறந்தவர்களுக்கு எந்தத் தொழில் அல்லது எந்த வேலைப் பொருத்தமாக இருக்கும் என்றும் எண் கணிதத்தின்படி கூறலாம். இந்த எண் கணிதத்தை பின்பற்றி உங்கள் பிறந்த நாளுக்கு உரியத் தொழிலை தேர்வு செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேறலாம். 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் 1 என்ற ...
Read More »