பேபால் நிறுவனமானது ஒன்லைன் ஊடான பணக் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக மேற்கொள்ளும் முன்னணி நிறுவனமாகும்.
இந் நிறுவனம் தற்போது குறித்த சேவையினை ஆப்பிள் சிறி ஊடாக மேற்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.இதன்படி ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள ஆப்பிள் சிறி ஊடாக எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும். இதனால் விரும்புவர்களுக்கு பணம் அனுப்பிக்கொள்ள முடியும். இவ் வசதியானது முதற்கட்டமாக 30 நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அந்நாடுகளாக Australia, Austria, Belgium (French and Dutch), Brazil, Canada (English and French), China, Denmark, Finland (Finnish), France, Germany, Hong Kong (Cantonese), India, Israel (Hebrew), Italy, Japan, Malaysia (Malay), Mexico, Netherlands, New Zealand, Norway, Russia, Saudi Arabia (Arabic), Singapore (English), Spain, Sweden, Switzerland (French, German, and Italian), Thailand, United Kingdom, United Arab Emirates (Arabic) மற்றும் United States என்பன காணப்படுகின்றன.
விரைவில் இச் சேவை ஏனைய நாடுகளிலும் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.