மெல்பேர்னில் தமிழர் செறிந்து வாழும் Bundoora பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலிய மாணவி Aiia Maasarwe படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபரை தாங்கள் கைது செய்துள்ளதாக விக்டோரிய காவல் துறையினர் அறிவித்துள்ளனர். மெல்பேர்ன் Greensborough பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் இன்று முற்பகல் 11.40 மணியவில் அவர் வீட்டில் வைத்து கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களாக மாணவியின் படுகொலை மர்மம் நிறைந்ததாக காணப்பட்டது. அத்துடன் கொலைக்கான எந்த ...
Read More »குமரன்
புத்தளத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்!- வெளிநாட்டு அமைப்பிற்கு தொடர்புள்ளதா?
புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் மீட்கப்பட்ட 100 கிலோ வெடிமருந்துகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இந்த வெடிமருந்துகளிற்கும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளிற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளிற்கும் உள்ளுர் தீவிரவாத குழுக்களிற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் நாங்கள் தற்போது மிகவும் தீவிரமான ஆழமான உணர்வுபூர்வமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்து அதிகாரியொருவர் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமைக்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார் இலங்கையின் உள்நாட்டு ...
Read More »கிணற்றிலிருந்து மண் அகழ்வின்போது வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கிணற்றிலிருந்து மண் அகழும்போது பல மோட்டார் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவ் விடத்துக்கு விரைந்த இராணுவத்தினரும், காவல் துறையினரும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »அடுத்த மாதம் டிரம்ப், கிம் ஜாங் அன் மீண்டும் சந்திப்பு!
அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் இரண்டாவது உச்சி மாநாட்டில் டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதில், கொரிய ...
Read More »அப்பிள் அறிமுகம் செய்யும் புது சாதனங்கள்!
அப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு முன் புதிய ஐபேட் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ஐபேட் மினி 5 மற்றும் புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபேட் மினி 4 மாடலின் மேம்படுத்தப்பட்ட டேப்லெட் சாதனம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஐபேட் மினி 4 செப்டம்பர் 2015 இல் அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஐபேட் மினி டேப்லெட் ...
Read More »பொறுப்புக் கூறல் சாத்தியமா?
மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கம் எவ்வாறு பொறுப்பு கூறப் போகின்றது என்பது, பிறந்துள்ள புதிய ஆண்டில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளில், அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியத் தேவையைக் கொண்டுள்ள தமிழர் தரப்பு அரசியலிலும் கூர்மையான விடயமாகக் கருதப்படுகின்றது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் மனி;த உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் சூடு பிடித்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகும். யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகின்றது. ஆனால், யுத்தகாலத்தில்; குறிப்பாக இறுதிக்கட்ட ...
Read More »பரிசுப் பொட்டலமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை!- தேவதேவன்
இயற்கை வியப்பு, ஆன்மிக அம்சத்தைத் தனது கவிதைகளின் அடிப்படையாகக் கொண்டு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் கவிஞர் தேவதேவன். கடவுளின் இடத்தில் இயற்கை ஒழுங்கை வைத்து அதன் விகாசத்தில் அது தரும் ஆனந்தத்தில் இயங்கும் பக்திக் கவிஞர் இவர். ‘கவிதை பற்றி’ என்ற சிறிய உரையாடல் நூலும் முக்கியமானது. முதல் தொகுதியான ‘குளித்துக் கரையேராத கோபியர்கள்’ தொடங்கி நாற்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். ‘புரியாது கழிந்த பொய்நாட்கள் எல்லாம்’ என்பது இவரது சமீபத்திய தொகுப்பு. கவிதையை உயிர்த்துவம் மிக்கச் செயல்பாடாகக் கருதும் தேவதேவனிடம் உரையாடியதிலிருந்து… ...
Read More »அவுஸ்திரேலியாவில் நடைப்பயிற்சி சென்ற தாய் சடலமாக மீட்பு!
நடைப்பயிற்சி சென்ற தாய், 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவுஸ்திரலேயாவின் மாகாணத்தை சேர்ந்தவர் ஃபெலிசிட்டி சாட்போல்ட் (36). இவர் கடந்த 2010ம் ஆண்டு crew (36) என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே ஃபெலிசிட்டி கர்ப்பம் தரித்தார். தான் எதிர்பார்த்ததை விட 7 மாதங்களுக்கு முன்னதாகவே ஃபெலிசிட்டிக்கு, 2.5 கிகி எடையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு குழந்தை மிகவும் பலவீனமாக இருப்பதால் ஒரு ...
Read More »100 கிலோகிராம் வெடிமருந்து: 3 மாத தடுப்பு ஆணை!
வனாத்தவில்லு பகுதியில், 100 கிலோகிராம் எடை கொண்ட வெடிமருந்துகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, 3 மாத தடுப்பு ஆணையை, சி.ஐ.டியினர் பெற்றுக்கொண்டுள்ளனர். மானவனெல்லையிலுள்ள புத்தர் சிலையொன்றைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதே, இந்த வெடிமருந்துகள் தொடர்பாக தெரியவந்திருந்தது. அதன் பின்னர், சி.ஐ.டியினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும்!-குமார வெல்கம
சில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் முதலில் நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் வினவிய போதே, நாடாளுமன்ற உறுப்பினரான குமாரவெல்கம மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More »