குமரன்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை! – இந்தியா – அவுஸ்ரேலியா மோதல்!

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் அவுஸ்ரேலியா மோதவுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நியூஸிலாந்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் 16 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் இந்தியா இடம்பெற்றுள்ள ‘பி’ பிரிவில் அவுஸ்ரேலியா, ஜிம்பாப்வே, பாப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜனவரி 13-ம் தேதி நடக்கும் முதல் போட்டியில்அவுஸ்ரேலிய அணியை எதிர்த்து இந்தியா ...

Read More »

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு சம்மன்!

இந்தியாவில் இயங்கி வரும் 21 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பின்பற்றி வரும் பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களி்ன் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் 21 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 21 ஸ்மார்ட்போன் ...

Read More »

கொச்சியை ஸ்தம்பிக்க வைத்த சன்னிலியோன்

கொச்சிக்கு வருகை புரிந்த சன்னிலியோனை பார்க்க திரண்ட கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. நடிகை சன்னிலியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து உள்ளவர். வெளிநாட்டைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இந்தி சினிமாக்களிலும் நடித்தார். ‘ஜிஸ்ம்-2’ என்ற என்ற இந்திப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. இதனால் அவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் தமிழில் `வடகறி’ என்ற படத்தில் ஒரு ...

Read More »

வேலூர் சிறையில் முருகன் ஜீவசமாதிக்கு தயார்!

ராஜீவ்காந்தி கொலை தொடபுடைய  முருகன், இன்று ஜீவசமாதி அடையப் போவதாக கூறியுள்ள நிலையில் அவரை சிறையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். வேலூர் சிறையில்  அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலையாளி முருகன், இன்று(18) ஜீவசமாதி அடையப் போவதாக கூறியுள்ள நிலையில் அவரை ஜெயில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதிகளாக முருகன், அவரது மனைவி நளினி, பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை ...

Read More »

அவுஸ்ரேலிய நாடாளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., பர்தா அணிந்து வந்ததால் பரபரப்பு

அவுஸ்ரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., பவுலின் ஹன்சன் பர்தா அணிந்து அணிந்து வந்தது பிற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவுஸ்ரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவராக பவுலின் ஹன்சன் என்ற பெண் இருந்து வருகிறார். இவர், அந்த நாட்டு நாடாளுமன்ற செனட் சபையின் உறுப்பினரும் ஆவார். இந்த கட்சி அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா என்று அழைக்கப்படுகிற முகத்திரை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், பவுலின் ஹன்சன் பாராளுமன்ற ...

Read More »

சர்வதேச நோட்புக் சந்தையில் முதலிடம் பிடித்த பிரபல நிறுவனம்

சர்வதேச சந்தையில் அதிக நோட்புக் சாதனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் சார்ந்த முழு தகவல்கள், டிரென்ட் ஃபோர்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. முந்தை ஆண்டை விட 3.6% வளர்ச்சியை கடந்து இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 39.96 மில்லின் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல்களின் வரவு மற்றும் வடக்கு அமெரிக்காவில் அதிக நோட்புக் சாதனங்கள் விற்பனையானது இரண்டாவது காலாண்டு விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. 2017-ம் ஆண்டின் முதல் பாதி வரை சந்தை கணிப்புகளை முறியடிக்கும் வகையில் ...

Read More »

பிக்பாஸ் தொடருக்கு மீண்டும் திரும்புகிறேனா?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரில் ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் அளித்துள்ள விளக்கத்தை கீழே பார்க்கலாம். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரில் ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் அளித்துள்ள விளக்கத்தை கீழே பார்க்கலாம். தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபலமான நபர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக 100 நாட்கள் இருக்குமாறு இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார். ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஆடையால் அவதி அடைந்த ஐஸ்வரயாராய்!

அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் இந்திய தேசிய கொடியை நடிகை ஐஸ்வர்யா ஏற்றினார். அப்போது லோ கட் நெக் வைத்த ஆடையால் அவர் சற்று தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார். புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும்போதும், அங்கிருப்பவர்களுடன் உரையாடும்போது தனது கை மற்றும் துப்பட்டாவை வைத்து கழுத்தினை மறைத்துக்கொண்டு சங்கடப்பட்டது தெளிவாக தெரிந்தது. ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது  தனது கையை வைத்து மறைத்தபடியே நின்றிருந்தார். மெல்போர்னில் நடக்கும் ...

Read More »

புதிய $10 நோட்டு பாவனைக்கு வருகிறது!

அவுஸ்ரேலியாவில் புதிய 10 டொலர் நாணயத்தாள்/நோட்டு எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி முதல் புழக்கத்திற்கு வரும் என ஆளுநர் Philip Lowe தெரிவித்துள்ளார். கடந்த வருடம் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 5 டொலர் நோட்டுக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 டொலர் நோட்டுக்கள் வெளியிடப்படுகின்றன. பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் இலகுவாக அடையாளம் காணும் வகையிலும், போலி நோட்டுக்களை அச்சடிக்க முடியாதவாறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடனும் இப்புதிய 10 டொலர் நோட்டு வெளியிடப்படுகின்றது. எந்த சிக்கல்களுமின்றி புதிய நோட்டுக்கள் மக்கள் பாவனைக்கு வரும்வகையில், பணம் பெறும் இயந்திரங்களில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் புகைப்பிடிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அவுஸ்ரேலியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாதவகையில் உயர்வடைந்துள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. தற்போது நாடு முழுவதும் வழக்கமாக புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனாக உயர்வடைந்துள்ளது. இது அமெரிக்காவின் தேசியளவில் புகைப்பிடிப்போர் வீதத்தைவிட அதிகமாகும். அவுஸ்ரேலியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக சிகரெட் மீது அதிகளவு வரி, plain packaging மற்றும் புகைப்பிடித்தலுக்கெதிரான பிரச்சாரங்கள் என, பல வழிகளிலும் அரசு முயற்சித்துவரும் நிலையில், புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2010 க்கும் 2013 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தி 17 ஆயிரத்தால் குறைவடைந்த போதும், இதன் பின்னரான ...

Read More »