சர்வதேச சந்தையில் அதிக நோட்புக் சாதனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் சார்ந்த முழு தகவல்கள், டிரென்ட் ஃபோர்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. முந்தை ஆண்டை விட 3.6% வளர்ச்சியை கடந்து இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 39.96 மில்லின் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புதிய மாடல்களின் வரவு மற்றும் வடக்கு அமெரிக்காவில் அதிக நோட்புக் சாதனங்கள் விற்பனையானது இரண்டாவது காலாண்டு விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. 2017-ம் ஆண்டின் முதல் பாதி வரை சந்தை கணிப்புகளை முறியடிக்கும் வகையில் வட அமெரிக்காவில் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டது.
முதல் அரையாண்டு வரை அதிக வரவேற்பை கிடைத்துவிட்ட நிலையில், அடுத்த காலாண்டுகளில் நோட்புக் விற்பனை கணிசமான அளவு குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக டிரென்ட் ஃபோர்ஸ் தெரிவித்துள்ளது. மூன்றாவது காலாண்டில் 3% இல் 5% வரை வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நோட்புக் நிறுவனங்களை பொருத்த வரை எச்பி நிறுவனம் ஆண்டு இலக்காக 10% விற்பனையை நிர்ணயித்துள்ளது. மேலும் மூன்றாவது காலாண்டிலும் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. லெனோவோ நிறுவனமும் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் விற்பனையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில் அதிக நோட்புக் சாதனங்களை விற்பனை செய்ததில் எச்.பி. நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. டெல் நிறுவனம் அதிகபட்சமாக 21.3 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளில் எச்.பி. நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வட அமெரிக்க பள்ளிகளுக்கு நோட்புக்களை விநியோகம் செய்து பேக்-டூ-ஸ்கூல் விற்பனையில் எச்.பி. நிறுவனம் தொடர்ந்து அதிக விற்பனையை பெற்றுள்ளது. எச்.பி. நிறுவனத்தைத் தொடர்ந்து லெனோவோ நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முந்தைய காலாண்டை விட 8.5 சதவிகித விற்பனையை பெற்றுள்ள லெனோவோ மொத்தமாக 9.35 மில்லியன் யுனிட்களை விற்பனை செய்துள்ளது.
லெனோவோ நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 8.05 மில்லியன் யுனிட்களை விற்பனை செய்துள்ள லெனோவோ வருடாந்திர அளவில் 2.4 சதவிகித சரிவை சந்தித்துள்ளது. ஆசியா-பசிபிக் பகுதிகளில் நோட்புக் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பிரான்டு மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல் நிறுவனம் சர்வதேச அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் 21.3 சதவிகிதம் வளர்ச்சியை பெற்றுள்ள டெல் முந்தைய காலாண்டில் 7.4 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வடஅமெரிக்க டென்டர்கள் மற்றும் க்ரோம்புக் வெளியீடு உள்ளிட்டவை டெல் நிறுவனத்தை மூன்றாவது இடத்தில் தக்க வைத்துக் கொள்ள உதவியது.
ஆப்பிள் நிறுவனம் 17.1 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில் அசுஸ் மற்றும் ஏசர் நிறுவனங்கள் ஆறாவது இடம் பிடித்துள்ளது.