சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி நாராயணன், உங்களுக்கு வெட்கமே இல்லையா என்று பதிவு செய்திருக்கிறார். சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீனன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இவர் கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஒருபுறம் ஆதரவு அளித்தாலும் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் விதமான ஷிவானி நாராயணன் ...
Read More »குமரன்
வாய்ஸ் டுவிட் வசதி; பயனாளர்கள் குஷி!
டுவிட்டர் நிறுவனம் தற்போது வாய்ஸ் டுவிட்களை பதிவிடும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். டுவிட்டரில் வாய்ஸ் பதிவுகளை இடமுடியாது. இந்நிலையில் தற்போது, ‘ஐபோன் வைத்திருக்கும் டுவிட்டர் பயனாளர்கள் தங்கள் கமெண்ட்களை தங்கள் வாய்ஸ்களில் தெரிவிக்கலாம். விரைவில் இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் போன்களிலும் வரும். டுவிட்டரில் இடப்படும் வாய்ஸ் மெசேஜ்களுக்கு கேப்ஷன் கொடுக்கும் ஆப்ஷனும் விரைவில் வெளியாகும்’ என, டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், வாய்ஸ் டுவீட்கள் இடுவதில் ...
Read More »அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்புக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், டிரம்புக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை நடந்த பிரச்சார பேரணியின்போது டிரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டயடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த டிரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக ...
Read More »தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
மட்டக்களப்பு காவல் துறையால் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா. அரியேந்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டு மாநகர சபை மேஜர்.ரி.சரவணபவான், நா.சங்கரப்பிள்ளை (நகுலேஸ்) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னியில் எடுத்கப்பட்டபோது இது தவறான செயல் என நீதவான் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமத்திரன் தெரிவித்தார் கடந்த 26 ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைந்வேந்தல் செய்ய முற்பட்டார்கள் என குற்றச்சாட்டு ...
Read More »தமிழரசுக் கட்சியின் தற்காலிக பதில் பொதுச் செயலாளராக சத்தியலிங்கம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தற்காலிகப் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்தமையை அடுத்து பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக கட்சி மட்டத்தில் தற்காலிகப் பதில் பொதுச் செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத் செயலாளர்களாகச் செயற்பட்டு வந்த வைத்தியர் ப. சத்தியலிங்கம் மற்றும் ...
Read More »அனுஷ்கா பந்தா இல்லாத நடிகை – மாதவன் புகழாரம்
நடிகை அனுஷ்கா பெரிய நடிகை ஆனாலும், பந்தா இல்லாமல் இருப்பதாக நடிகர் மாதவன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் சைலன்ஸ் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி நடிகர் மாதவன், பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: “அனுஷ்காவும், நானும் முதன்முதலாக ‘இரண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தோம். அந்த படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார். அப்போது அவர் சினிமாவுக்கு புதுசு. 14 வருடங்கள் கழித்து நாங்கள் இருவரும் ‘சைலன்ஸ்’ படத்தில் இணைந்து நடித்து இருக்கிறோம். அனுஷ்காவிடம் ...
Read More »சங்கர்: சிறுவர்களின் ஓவிய அரசர்
ஒரு தலைமுறையின் இளவயதுக் கொண்டாட்ட இதழான ‘அம்புலிமாமா’வின் பாத்திரங்களுக்குத் தன் தூரிகையால் உயிர் கொடுத்தவரான ஓவியர் சங்கர் விடைபெற்றுக்கொண்டார். காலத்தில் அவரும் ஒரு கதையாகிவிட்டார். இன்னும் மூன்றாண்டுகளில் நூற்றாண்டைத் தொடவிருந்த சங்கர் தொண்ணூறுகளிலும் தூரிகையுடன் இயங்கிவந்தவர். ஓவியப் பள்ளியின் உருவாக்கம் 1924 ஜூலை 19-ல் ஈரோடு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தவர் சங்கர். இயற்பெயர் கே.சி.சிவசங்கரன். தனது 10-வது வயதில் தாய், தம்பியுடன் சென்னைக்கு வந்தவர். பிராட்வே கார்ப்பரேஷன் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிக் காலத்திலேயே தனது ஓவியத் திறமையால் சக மாணவர்களை ...
Read More »சுற்றுச்சூழலை பாதுகாக்க ஐபோன் 12 சீரிசில் அதிரடி மாற்றம் செய்யும் அப்பிள்
அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 வாங்குவோருக்கு அதெல்லாம் வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. அப்பிள் நிறுவனம் செப்டம்பர் நிகழ்வில் அறிமுகம் செய்த புதிய ஆப்பிள் வாட்ச்களுடன் சார்ஜிங் அடாப்டரை வழங்கவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், சமீபத்திய ஐஒஎஸ் 14 குறியீட்டு விவரங்களின் படி ஐபோன் 12 வாங்குவோருக்கும் இதே வழிமுறை பின்பற்றி இயர்பாட்களை வழங்காது என கூறப்படுகிறது. அந்த வகையில், இனி வரும் ஆப்பிள் சாதனங்களுடன் சார்ஜிங் அடாப்டர் மற்றும் இயர்பாட்களை எதிர்பார்க்க முடியாது ...
Read More »சூர்யாவுக்கு சவால்விட்ட பிரகாஷ்ராஜ்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவுக்கு, பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் சவால் விட்டுள்ளார். சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற ஒன்றை தொடங்கி வைத்தார். இந்த சேலஞ்சை விஜய், மகேஷ் பாபு, பிரபாஸ், நாகர்ஜுனா, கீர்த்தி ...
Read More »ஆஸ்திரேலியா: விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்துள்ளன!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாகக் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. அங்குப் புதிதாக 13 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானதாகவும் நால்வர் மாண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 14 நாள்களாக மெல்பர்னிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமிப்பரவல் குறைந்துவருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel Andrews) அதன் தொடர்பில் செய்தியாளர் கூட்டம் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாத மத்தியில் மாநிலத்தில் COVID-19 தொடர்பான வழக்கநிலையை உறுதிசெய்வதற்கான முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
Read More »
Eelamurasu Australia Online News Portal