இலங்கை தமிழரசுக் கட்சியின் தற்காலிகப் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்தமையை அடுத்து பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக கட்சி மட்டத்தில் தற்காலிகப் பதில் பொதுச் செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத் செயலாளர்களாகச் செயற்பட்டு வந்த வைத்தியர் ப. சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூடும் வரையிலும் துணைத் செயலாளராக செயற்பட்டு வந்த ப. சத்தியலிங்கத்தை பதில் பொதுச்செயலாளராக செயற்படுமாறு கட்சித் தலைவர் மாவை.சேனாதிராசா பணித்துள்ளார்.