வாய்ஸ் டுவிட் வசதி; பயனாளர்கள் குஷி!

டுவிட்டர் நிறுவனம் தற்போது வாய்ஸ் டுவிட்களை பதிவிடும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். டுவிட்டரில் வாய்ஸ் பதிவுகளை இடமுடியாது. இந்நிலையில் தற்போது, ‘ஐபோன் வைத்திருக்கும் டுவிட்டர் பயனாளர்கள் தங்கள் கமெண்ட்களை தங்கள் வாய்ஸ்களில் தெரிவிக்கலாம். விரைவில் இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் போன்களிலும் வரும். டுவிட்டரில் இடப்படும் வாய்ஸ் மெசேஜ்களுக்கு கேப்ஷன் கொடுக்கும் ஆப்ஷனும் விரைவில் வெளியாகும்’ என, டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

latest tamil news

ஆனால், வாய்ஸ் டுவீட்கள் இடுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. சிலர் ஆபாசமான வார்த்தைகளில் டுவிட்களைப் பதிவிட வாய்ப்புள்ளது. இந்நிலையில் வாய்ஸ் கமெண்ட்களை அனுமதித்தால் ஆபாசமாக பேசி பதிவு செய்து வாய்ஸ் கமெண்ட்களை இடுவர். இப்படியான முரண்பாடுகளுக்கு மத்தியில் இந்த புதிய அப்டேட் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.