தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

மட்டக்களப்பு காவல் துறையால் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா. அரியேந்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டு மாநகர சபை மேஜர்.ரி.சரவணபவான், நா.சங்கரப்பிள்ளை (நகுலேஸ்) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னியில் எடுத்கப்பட்டபோது இது தவறான செயல் என நீதவான் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமத்திரன் தெரிவித்தார்

கடந்த 26 ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைந்வேந்தல் செய்ய முற்பட்டார்கள் என குற்றச்சாட்டு சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா. அரியேந்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டு மாநகர சபை மேஜர்.ரி.சரவணபவான், நா.சங்கரப்பிள்ளை (நகுலேஸ்) ஆகியோருக்கு எதிராக காவல் துறை வழக்கு தாக்குதல் செய்து இன்று வெள்ளிக்கிழமை (02) நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பானை வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.சுமத்திரன் இவர்களுக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர் இவருடன் நீதிமன்ற அனைத்து சட்டத்தரணிகளும் ஆஜராகினர். இந்த வழக்கு நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டு இதில் பல விடயங்களை சட்டத்தரணி சுமத்திரன் சுட்டிக்காட்டியதையடுத்த நீதவான் இந்இதற்கு மேல் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அத்தனை பேரும் விடுவிக்கப்பட்னர் என நீதிமன்றம் உத்தரவிட்டது

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.சுமத்திரன் தெரிவித்தாவது

இந்த மாவட்டத்தில் முக்கிய பிரைஜைகள் என்பர்கள் மீது எதிரிகளுக்கு கொடுக்கின்ற அழைப்பானை வழங்கப்பட்டது அவர்கள் நீதிமன்றில் தோண்றினர் இவர்கள் சார்பாக நான் ஆஜராகினேன் என்னுடன்;. அனைத்து சட்டத்தரணிகளும் ஆஜராகினர்.

இப்படியான காவல் துறை  நடவடிக்கை முற்று முழுதாக தவறானது என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினோம் எந்தவித குற்றமும் செய்ததாக அந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை அந்த அறிக்கையில் சொல்லப்பட் விடயங்கள் பொய்யானவை. திலீபன் யுத்தத்தில் மரணித்ததாகவும், அறிக்கையிடப்பட்டுள்ளது திலீபன் உண்ணாவிரதம் இருந்து 12 நாட்களில் மரணித்தவர் அவருடைய நினைவுதான் அதனை நாங்கள் வருடாவருடம் நினைவு கூர்ந்துவருகின்றோம்

ஆகையினால் காவல் துறைக்கு கூட அந்த தகவல் தெரியாமல் அல்லது வேணும் என்றே தவறாக அதிலே எழுதப்பட்டிருந்தது இந்த 6 பேரும் எந்த குற்றமும் செய்தார்கள் என்று சொல்லப்படவில்லை தடை உத்தரவு பெற்பட்டதாhக நீதிமன்றில் காவல் துறையினர் தெரிவித்தனர். அதன் போது நீதவான் தடை உத்தரவு கொடுக்க முடியாது என காவல் துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக நாங்களும் அதனை வலியுறுத்தி சொன்னோம்.

பொதுமக்கள் நடமாடுவதற்கு பொது இடங்களிலே இடையூறு விளைவித்தால் மட்டும் தான் அப்படியான தடை உத்தரவு கொடுக்கப்பட முடியுமே தவிர பொலிசாரின் கற்பனையிலே ஏதே எங்கோ நடக்கப் போகின்றது என தடை உத்தரவு பெற முடியாது அது நீதிமன்ற செயற்பாடுகளை தவறாக இட்டுச் செல்லுகின்ற செயற்பாடு. ஆகவே இந்த தர்ணத்திலே நீதிமன்றத்திலே பொய்யான அறிக்கை சமர்ப்பித்து இந்த முக்கியமானவர்களையும் காவல் துறை நீதவான் நீதிமன்றத்துக்கு கொண்டுவந்து நிறுத்திய செயலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தோம்.

நீதவானும் அதனை ஏற்றுக் கொண்டு திறந்த நீதிமன்றத்தில் ஆம் இது தவறான செயல் என்பதை சொன்னார். போலிசார் இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வார்கள் என நம்புகின்றோம. ஆனால் காவல் துறை முறைதவறி நடந்த காரணத்;தாலே பொலிசுhருக்கு எதிராகு நாங்கள் உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்.

ஏன் என்றால் இது இப்போது வழக்கமாக வந்துள்ளது இப்பொழுது அவர் அதை செய்கிறார். கோயிலுள் கும்பிடுகின்றார், வீட்டிலே விரம் இருக்கப் போகின்றார். என அதை தடுங்கள் என நீதிமன்றத்தில் சென்று தடை உத்தரவு வழக்கம் ஒன்று ஆரம்பமாகிறது அதை முளையிலே கிள்ளியெறியவேண்டும். அப்படியான தடை உத்தரவு கொடுப்பதற்கு எங்கள் நாட்டிலே சட்டத்திலே இடமே கிடையாது ஆகவே தவறான விதத்திலே நீதிமன்றத்தை நடாத்தும் காவல் துறைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து இந்த போக்கை தடுப்போம்.

இன்று கௌரவ நீதவான் இந்த நடைமுறை தவறு என்பதை அவராகவே ஒரு முறைக்;கு மேல் சென்னih மதிப்போது நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். இதற்கு மேல் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அத்தனை பேரும் விடுவிக்கப்பட்னர் என நீதிமன்றம் உத்தரவிட்டது எனவே இதற்கு பிறகாவது காவல் துறை இப்படி முறைதவறி நடக்க கூடாது என காவல் துறைக்கு நாங்கள் எச்சரிக்கை விடுகின்றோம் என அவர் தெரிவித்தார்