அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 வாங்குவோருக்கு அதெல்லாம் வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.
அப்பிள் நிறுவனம் செப்டம்பர் நிகழ்வில் அறிமுகம் செய்த புதிய ஆப்பிள் வாட்ச்களுடன் சார்ஜிங் அடாப்டரை வழங்கவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், சமீபத்திய ஐஒஎஸ் 14 குறியீட்டு விவரங்களின் படி ஐபோன் 12 வாங்குவோருக்கும் இதே வழிமுறை பின்பற்றி இயர்பாட்களை வழங்காது என கூறப்படுகிறது.

அந்த வகையில், இனி வரும் ஆப்பிள் சாதனங்களுடன் சார்ஜிங் அடாப்டர் மற்றும் இயர்பாட்களை எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது.
இதேபோன்ற தகவல் முன்கூட்டியே பலமுறை வெளியாகி வந்தது. எனினும், புதிய ஐபோன்களில் 5ஜி கனெக்டிவிட்டி மற்றும் இதர அம்சங்களால் ஏற்படும் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டது.
										
									 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				