குமரன்

எல்.ஜி. 5ஜி ஸ்மார்ட்போன்!

எல்.ஜி. நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் மற்றும் சில சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. எல்.ஜி. நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ஜி8 ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படாது என தகவல் வெளியானது. இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 24 ஆம் திகதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் வேப்பர் சேம்பர் பயன்படுத்தப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் வேப்பர் சேம்பர் ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியதும் இருவரும் பொறுப்பாக ஆடினர். முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். இறுதியில், முதல் செட்டை 7-6 (2) என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் ...

Read More »

வளி மண்டலத்தில் கரியமில வாயு: 2019-ல் உச்சத்துக்குப் போகும்!

முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் (கரியமில வாயு) அளவு இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரிட்டனின் வானிலை மைய ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கரியமில வாயுவை ஆக்ஸிஜனாக மாற்றும் காடுகளின் பரப்பளவு ஒவ்வொரு வருடமும் குறைந்து வரும் அதே வேளையில், மனிதர்களின் செயல்பாடுகளால் வெளியாகும் கரியமிலவாயு அளவும் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், சமீபத்திய ஆண்டுகளில் வெப்பமண்டல பசிபிக் பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், அங்கு மரங்கள், செடிகளின் வளர்ச்சி அளவு குறைந்து கரியமிலவாயு உறிஞ்சப்படுவதும் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, ...

Read More »

பிரியங்கா அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா?

ஆண்டு 1999. இடம் ரேபரேலி. பரபரப்பான தேர்தல் நேரம். காங்கிரஸ் வேட்பாளர் கேப்டன் சதீஷ் ஷர்மா. பாஜக சார்பில் அருண் நேரு போட்டியிட்டார். ஆம், ராஜீவ் காந்தியின் உறவினரான அதே அருண் நேரு. 27 வயதான இளம்பெண் அப்போது காங்கிரஸ் வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்தார். அவரைப் பார்க்கவும், அவருடைய பேச்சை கேட்கவும் பெருமளவு கூட்டம் கூடியது. அருண் நேரு ஏற்கெனவே ரேபரேலியில் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் பாஜக மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் 27 வயதே ஆன இளம்பெண் கூட்டத்தைப் பார்த்து, “என் தந்தைக்கு ...

Read More »

இலங்கையில் இந்தியாவின் வகிபாகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கூறுவது என்ன ?

அரசியல் மனித உரிமைகள் நல்லாட்சி மதிக்கப்படாவிடின் ஜீ.எஸ்.பி.யை மறுபரிசீலனை செய்ய நேரிடுமென ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். ஜெனிவாவில் இம்முறையும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படலாம். ஆனால் அதனை ஜெனிவாவில் நடைபெறும் கலந்துரையாடல்களிலேயே தீர்மானிப்போம் என இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் லை மார்க்   வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். தற்போது எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மனந்திறக்கிறார். கேள்வி: ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மனித உரிமை விவகாரத்தில் ...

Read More »

சம்பள உயர்வைக் கோரி சத்தியாகிரகப் போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வைக் வழங்கக் கோரி, டிக்கோயா – சலங்கந்தை பகுதியை சேர்ந்த சிவனு கணேசன் என்பவர், அட்டன் – மல்லியப்பு சந்தியில், இன்று சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பாராமுகமாக செயற்படாமல் உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், கொழும்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துமே, குறித்த நபர் மேற்படி சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அண்மைக்காலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைக் கோரி பல்வேறு ...

Read More »

மஹிந்தவுக்கு தென் மாகாணத்திலும் மாத்திரம் தான் ஆதரவு!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தென் மாகாணத்தில் மாத்திரமே ஆதரவு காணப்படுகின்றது. எனினும் மேல், மத்திய மற்றும் ஊவா உள்ளிட்ட மாகாணங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கே பெரும்பாண்மை காணப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலானாலும் அதில் வெற்றி பெறுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக அமையாது என தெரிவித்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

அவுஸ்திரேலிய ரோந்துப் படகுகள் சிறிலங்காவில்!

அவுஸ்ரேதிலியா மேலும் மூன்று ரோந்துப் படகுகளை சிறிலங்கா  கடலோரக் காவற்படைக்கு நேற்று வழங்கியுள்ளது. ஸ்டபிகிராப்ட் வகையைச் சேர்ந்த இப் படகுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா கடற்படையின் ரங்கல்ல தளத்தில் இடம்பெற்றது. சிறிலங்கா  கடற்படைக்கு அவுஸ்திரேலியா கடந்த 2014 ஆம் ஆண்டு 38 மீற்றர் நீளம் கொண்ட, பே ரகத்தைச் சேர்ந்த இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று கடலோரக் காவல்படைக்கு வழங்கப்பட்டுள்ள, 3 படகுகளும் சிறிய வகையானது எனத் தெரியவந்துள்ளது.

Read More »

2 மாதங்களில் டிரம்ப், கிம் ஜாங் அன் சந்திப்பு!

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவருக்கும் இடையேயான 2-வது சந்திப்பு அடுத்த மாதம் இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. இதனிடையே மீண்டும் ...

Read More »

நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை – கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில், தான் தனது பாட்டிக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை என்று கூறினார். வாரிசு நடிகையாக அறிமுகமானாலும் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். முக்கியமாக நடிகையர் திலகம் படத்தில் மூத்த நடிகை சாவித்திரியை கண் முன் கொண்டு வந்ததால் நாடு முழுக்க பிரபலம் ஆகிவிட்டார். கீர்த்தி சுரேஷ் முன்னாள் நடிகை மேனகா சுரேசின் மகள். கீர்த்தியின் பாட்டியும் ஒரு நடிகை தான். சில படங்களில் நடித்துவிட்டு ஒதுங்கியவர், தனது 80 ...

Read More »