ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.
ஆட்டம் தொடங்கியதும் இருவரும் பொறுப்பாக ஆடினர். முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். இறுதியில், முதல் செட்டை 7-6 (2) என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் ஒசாகா.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 2வது செட்டை கிவிடோவா 5-7 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஒசாகா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் பெற்றார். இந்த போட்டி சுமார் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்தது.
Eelamurasu Australia Online News Portal