பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வைக் வழங்கக் கோரி, டிக்கோயா – சலங்கந்தை பகுதியை சேர்ந்த சிவனு கணேசன் என்பவர், அட்டன் – மல்லியப்பு சந்தியில், இன்று சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பாராமுகமாக செயற்படாமல் உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், கொழும்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துமே, குறித்த நபர் மேற்படி சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அண்மைக்காலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைக் கோரி பல்வேறு வகையான போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், மலையகத்தில் அட்டனில் சிவனு கணேசன் என்பவர் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal