குமரன்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்கும் போது, கூட்டமைப்பிற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுகிறது. டக்களஸ் தேவானந்தா 1990இல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை நிறுவினார். 1994இல் முதல் முதலாக ஒரு சுயோற்சைக் குழுவாக போட்டியிட்டு, ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டக்களஸ் தனது பாராளுமன்ற அரசியல் வாழ்வில் நுழைந்தார். ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதுதான் டக்களசின் நிலைப்பாடு. இன்றுவரை டக்களசின் நிலைப்பாட்டில் எந்தவொரு ...

Read More »

சாய்ந்தமருது பிரதேசம் “ஐ.எஸ்.“ இன் தலைமையகம்!

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக காவல் துறை  பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு உட்பட பல பகுதிகளில் தொடர் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் முக்கிய பகுதியாக சாய்ந்தமருது வீடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று அதிகளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. வெடிப்பு பொருட்கள், டெட்டனேற்றர்கள், பறக்கும் ரோன் இயந்திரமும் இதில் அடங்கும் என இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் சுமித் ...

Read More »

ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் வவுணதீவு காவல் துறை மீது!

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் சம்பவமாக வவுணதீவு காவல் துறை மீதான தாக்குதல் என காவல் துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹரானின் வாகன சாரதியான காத்தான்குடி -3 மீன் மார்க்கெட் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முகமது சரீப் ஆதம் லெப்பை கபூர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு காவல் துறை விசாரணைக்குட்படுத்தப்பட்டார். ஸஹரானின் வாகன சாரதியான கபூரிடமிருந்து கைத் துப்பாக்கி மற்றும் லப்டொப் ஆகியன மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறை அவரிடம் மேற்கொண்ட ...

Read More »

கைபேசி தந்த…..

நாம் கைபேசியை உபயோகிக்கும் போது நம் கழுத்துப்பகுதி குனிந்த நிலையில் இருக்கும்போது கழுத்திற்கு பின்புறம் உள்ள தசைகளில் ஏற்படும் தொடர் இயக்கங்களால் கழுத்துவலி ஏற்படுகிறது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கைபேசியை உபயோகித்து வருகிறார்கள். அன்றாட வாழ்வில் நாம் எப்படி குளிப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது போன்ற இன்றியமையாத பழக்கங்களை செய்து வருகிறோம். அதேபோல் கைபேசியை ஐந்து மணித்துளிகளுக்கு ஒருமுறை தொடர்ந்து ஆராய்ந்து பார்ப்பது, அதாவது எடுத்து பார்ப்பது நம்மை அறியாமல் நமக்கு ஏற்பட்ட முக்கிய பழக்கமாகிவிட்டது. சுமாராக நடுத்தர ...

Read More »

ஐ.எஸ் பயங்காரவாதிகளின் ஆடைகளும் ஆயுதங்களும் மீட்பு!

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்குச் சொந்தமான சில பொருள்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக, காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேரக தெரிவித்துள்ளார். இதன்படி, ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆடைத் தொகுதியொன்றும் ஐ.எஸ் என்று எழுதப்பட்ட அவர்களுடைய கொடியொன்றும் மீட்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, 150 ஜெலெட்க்னைட் குச்சிகளும் 100,000 இரும்பு குண்டுகளும் ஒரு ட்ரோன் கமொராவும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Read More »

ISIS பயங்கரவாதிகள் சுமார் 130 பேர் இலங்கையில் உள்ளனர்!- மைத்திரிபால சிறிசேன

ISIS பயங்கரவாத செயற்பாடுகளை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டும் பலம் எமது நாட்டின் பாதுகாப்புத் துறையிடம் உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த பயங்கரவாத இயக்கத்தை இலங்கையிலிருந்து அடியோடு ஒழித்து விரைவாக நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும் சிறிலங்கா ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இன்று (26) கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே சிறிலங்கா ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பணிப்பாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பெருமளவு ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ...

Read More »

தற்கொலைக் குண்டுதாரியின் கணக்காய்வாளர் கைது!

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் போது, கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டல் குண்டுதாரிக்குச் சொந்தமான வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையின் கணக்காய்வாளர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால், நேற்றைய தினம் (25) கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில், சந்தேகத்துக்கிடமான கார் ஒன்று, குற்றப் புலனாய்வுப் பிரினரால் கைப்பற்றப்பட்டது. குறித்த வாகனம், தாக்குதல் தினத்தன்று, அக்கரைப்பற்றுக்குச் சென்றிருந்ததாகவும் தான் அன்றைய தினம் ​அதைச் செலுத்தியிருக்கவில்லை என்று, குறித்த காரின் சாரதி தெரிவித்திருந்தார். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, மேற்படி கணக்காய்வாளரே, குறித்த வாகனத்தைச் செலுத்தியுள்ளாரெனத் ...

Read More »

ரிஷாட்டின் சகோதரர் விசாரணையின் பின் விடுவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, நாட்டில் பல பாகங்களில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீனிடம்  சிறிலங்கா காவல் துறையினர்  வாக்குமூலம் பதிவு​ செய்துள்ளனர். நேற்று (25) இரவே, இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவக் காவலில் எடுக்கப்பட்ட அவர், மேலதிக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என, இராணுவம் தெரிவித்துள்ளது.

Read More »

கடந்த இரண்டு வருடங்களாக சஹ்ரான் ஹஸீம் தலைமறைவாகவே வாழ்ந்தார்!

தனது அண்ணனான சஹ்ரான் ஹஸீம், கடந்த 2017ஆம் ஆண்டில், அவரது மனைவி, பிள்ளைகளுடன் வாழ்ந்தார் என்றும் அவ்வாண்டில் அவர், முஸ்லிம் குழுக்களுடன் இணைந்துச் செயற்பட்டு வருகின்றார் என்பது தொடர்பில் தெரியவந்ததாகவும், சஹ்ரானின் சகோதரி, பீ.பீ.சி உலகச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். அதேபோன்று, கடந்த இரண்டு வருடங்களாகவே, தனது சகோதரனுடன், தான் எவ்விதத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் ​எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பது தொடர்பில், தனக்கு எதுவும் தெரியாதென்றும், அவர் மேற்கொண்ட மிலேச்சதனமாக செயற்பாடுகளைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சஹ்ரானின் சகோதரி தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ...

Read More »

கொழும்பு குண்டுவெடிப்பில் காயமடைந்த மெல்பேர்ன் பெண்ணை அவுஸ்ரேலியா கொண்டு செல்ல நடவடிக்கை!

கொழும்பு குண்டுவெடிப்பில் மெல்பேர்ன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள தனது மகளை மெல்பேர்னுக்கு கொண்டுவந்து மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக சம்பவத்தில் காயமடைந்த 28 வயது பெண்ணின் தந்தை கூறியுள்ளார். கொழும்பு கிங்கஸ்பரி ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்துள்ள குறிப்பிட்ட பெண்ணுக்கு கால் முறிந்துள்ளது. சன்னங்கள் நுரையீரல் வரைக்கும் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சத்திரசிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலையில் உள்ள இவருக்கு மேலதிக சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றன. காயமடைந்த பெண்ணின் தந்தை ரஞ்சித் வீரசிங்க மேலும் ...

Read More »