உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, நாட்டில் பல பாகங்களில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீனிடம் சிறிலங்கா காவல் துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நேற்று (25) இரவே, இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவக் காவலில் எடுக்கப்பட்ட அவர், மேலதிக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என, இராணுவம் தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal