உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் போது, கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டல் குண்டுதாரிக்குச் சொந்தமான வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையின் கணக்காய்வாளர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால், நேற்றைய தினம் (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில், சந்தேகத்துக்கிடமான கார் ஒன்று, குற்றப் புலனாய்வுப் பிரினரால் கைப்பற்றப்பட்டது. குறித்த வாகனம், தாக்குதல் தினத்தன்று, அக்கரைப்பற்றுக்குச் சென்றிருந்ததாகவும் தான் அன்றைய தினம் அதைச் செலுத்தியிருக்கவில்லை என்று, குறித்த காரின் சாரதி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, மேற்படி கணக்காய்வாளரே, குறித்த வாகனத்தைச் செலுத்தியுள்ளாரெனத் தெரியவந்துள்ளது. இதனடிப்படையிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal