`குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த வருடம் (2017) வெளிவந்த படங்களில், பெரிதும் பாராட்டப்பட்ட படம், `8 தோட்டாக்கள்.’ இந்த படத்தின் டைரக்டர் ஸ்ரீகணேஷ். இவருடைய அடுத்த படத்துக்கு, `குருதி ஆட்டம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் நடிகர்-நடிகைகள் முடிவாகவில்லை. டி.முருகானந்தம், ஐ.பி.கார்த்திகேயன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இது, முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் நடக்கும் கதையம்சம் கொண்ட படம். வியாபார ரீதியிலான திகில் படம், இது. அதர்வாவின் திறமைக்கு தீனி போடும் படமாக ...
Read More »குமரன்
விக்கியின் தெரிவுகள்!
அண்மையில் நடக்க இருக்கின்ற வடக்கு மாகாணசபை தேர்தலில் பின்வரும் மூன்று தெரிவுகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு காத்திருக்கின்றன, 01. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + தமிழ் தேசிய கூட்டமைப்பு = விக்கியின் அரசியல் மரணம். 02. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + ஒட்டுக்குழுக்கள் (PLOT, TELO, EPRLF) = விக்கியின் அரசியல் மலினம். 03. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + தமிழ் தேசிய மக்கள் முன்னணி = விக்கியின் அரசியல் மலரும். முதலாவது கூட்டை பொறுத்தவரையில் அந்த தெரிவு விக்கியின் அரசியல் ...
Read More »ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கு இசையமைத்த ரமணன் காலமானார்!
யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞரும் யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். ஈழத்தில் ஆயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களை கவர்ந்த இவர் ஈழத்தின் மூத்த இசைத்துறைக் கலைஞர்கள் மற்றும் ஒளி, ஒலிபரப்புத் துறை கலைஞர்களுடன் இணைந்து இசைப் பணியாற்றியவர். காலத்திற்கு காலம் பல்வேறு இசைக்குழுக்களிலும் இவர் முக்கியத்துவமான கலைஞராக இயங்கியுள்ளார். இந்திய இராணுவக் காலப்பகுதியில் மக்களை எழுச்சிப் படுத்தும் பல ...
Read More »சிறிலங்காவில் குற்றவியல் சட்டமூலம் நிறைவேற்றம்!
குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்தச் (சட்டமூலம்) மீதான இரண்டாம் வாசிப்பு, மேலதிக வாக்குகளினால், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு, 73 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளுமே அளிக்கப்பட்டன. மூன்றாவது வாசிப்பு, குழுநிலையில் வைத்து, நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால், திருத்தப்படுகின்றது. திருத்தப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், 64 மேலதிக வாக்குகளினால் அந்த சட்டமூலம் ...
Read More »முகமாலையில் மர்மப் பொருள் வெடித்து மாணவன் படுகாயம்!
முகமாலை தெற்கு, கோவானம் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவர் ஒருவர் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் தனது கையின் பின்பகுதியை இழந்துள்ளார். குறித்த சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது, எழுதுமட்டுவாளை சேர்ந்த ஜெயபாலன் நிதர்சன் 18 வயது மாணவனே நேற்று காலை 11.00 மணிக்கு முகமாலை தெற்கு கோவானம் காட்டுப்பதிக்குள் வேலி அடைப்பதற்காக கட்டை தறிக்க சென்ற போது மர்மப் பொருள் வெடித்ததில் கையை இழந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அனர்த்தத்தினால் மாணவனின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக வைத்திய ...
Read More »யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்! -நேர்காணல்
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் என்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை படிக்கவைத்து பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் பெற்றோரையும் அவர்களின் அரவணைப்பையும் இழந்து ஆபத்தில் தவித்த சிறுவர்களுக்கென ஓர் அன்பான இல்லம் அமைக்கவேண்டும் என்ற முயற்சியின் பயனாய் 2012 ஆம் ஆண்டு இலங்கையின் 6ஆவது சிறுவர் கிராமமாக யாழ்ப்பாணத்தில் “எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் யாழ்ப்பாணம்” அமைக்கப்பட்டது. யாழ். நகரில் இருந்து 4.5 கிலோ மீற்றர் தொலைவில் நாயன்மார்க்கட்டு பிரதேசத்தில் குறித்த ...
Read More »அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து!
அவுஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 96,542 மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலுவதற்கென வழங்கப்பட்ட மாணவர் விசாக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2017 டிசம்பர் வரையான காலப் பகுதியிலேயே இவ்விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள், கொள்ளை, பாலியல், ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவர்கள் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் விசாக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை Character and General Visa Cancellation சட்டமூலம் கடந்த ...
Read More »பறக்கும் செல்ஃபி கமரா!
ஹோவர் நிறுவனத்தின் பறக்கும் கமரா சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கையடக்க கருவியின் மூலம் 12 எம்பி தரத்திலான புகைப்படங்களையும் 4கே தரத்திலான வீடியோக்களையும் எடுக்கமுடியும். நமது புகைப்படத்தை ஒருமுறை பதிவு செய்வதன் மூலம் வெளியிடங்களில் நம்மை சரியாக அடையாளம் கண்டுகொண்டு ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் திறன் கொண்டது. தலைக்கு மேலே 20 மீட்டர்வரை பறக்கக்கூடியது. 242 கிராம் எடை கொண்ட இந்த கமராவுக்கு ஹோவர் கமரா பாஸ்போர்ட் ட்ரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது
Read More »இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல்!
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் திகதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கிரிக்கெட் வீரராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய இம்ரான்கானின் (வயது 65) தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து, சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி அரசு அமைக்கும் நிலை உள்ளது. தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள இம்ரான்கான் என்றைக்கு பதவி ஏற்பார் என்பதில் ...
Read More »மகனை குடும்பமே சேர்ந்து கொலை செய்து புதைத்த கொடூரம்!
அவுஸ்திரேலியாவில் கால்பந்து இறுதிப்போட்டி பார்ப்பதில் ஏற்பட்ட வாய்தகராறின்போது பெற்ற மகனையே கொலை செய்த தந்தைக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் Perth பகுதியை சேர்ந்தவர் Ernest Albert Fisher(67). இவருக்கு 23 வயதில் Matthew என்ற மகன் இருந்தார். கடந்த 2016 அக்டோபர் மாதம் AFL என அழைக்கப்படும் அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட லீக்கின் இறுதி போட்டியை பார்க்கும் பொழுது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவனது தந்தை Ernest திடீரென இரண்டு கூர்மையான கத்தியை எடுத்து, ...
Read More »